சாலையில் சென்ற மின்ஸ்கூட்டர் தடுத்து வைப்பு

மின்ஸ்கூட்டரில் சாலையில் சென்றார்; வாகனத்தை ஆணையம் முடக்கியது குழந்தையை ஏற்றிக்கொண்டு மின்ஸ்கூட்டரில் சாலையில் சென்ற ஒரு மாதின் வாகனத்தை நிலப் போக்குவரத்து ஆணையம் முடக்கிவைத்துள்ளது. எட்ஜ்ஃபீல்டு பிளைன்ஸ் பகுதியில் சாலையில் அந்த மாது மின்ஸ்கூட்டரை ஓட்டிச் சென்றபோது அமலாக்க அதிகாரிகள் தடுத்து நிறுத்தி அவரை விசாரித்தனர் என்று ஆணையம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது. சாலைகளில் சைக்கிள்களும் நிலப் போக்குவரத்து ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற மின்சக்தி வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்பதை ஆணையம் நினைவூட்டி இருக்கிறது.2017-02-03 06:30:00 +0800

மின்ஸ்கூட்டரில் பிள்ளையை ஏற்றிக் கொண்டு சாலையில் சென்ற ஒரு மாதின் வாகனம் முடக்கப் பட்டது. படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்