நயன்தாராவுக்கு சூரி ஜோடி

புதுமுக இயக்குநர் ஒருவர் நயன்தாராவிடம் நகைச்சுவை கதை கூறியுள்ளார். அதில் சூரி தான் கதாநாயகன் என்று கூறியதற்கு எந்தவித தயக்கமும் நயன்தாரா காட்டாமல் சம்மதம் சொன்னதாக தகவல் வெளியானது. இதையடுத்து, சூரிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார் என்ற தகவல் ஃபேஸ்புக், டுவிட்டர் என சமூக வலைத்தளம் மட்டுமல்லாமல் இணையத்தளங்களிலும் காட்டுத்தீயாகப் பரவ நயன்தாரா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக 'பக்கா' திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்த 'பரோட்டா' சூரியைத் தொடர்பு கொண்ட தமிழக ஊடகம் ஒன்றிடம் மறுப்பு தெரிவித்து நயன்தாரா ரசிகர்களை நிம்மதி பெருமூச்சு விடச் செய்தார்.

"யாரோ திடீர்ன்னு கொளுத்திப் போட்டிருக் காங்க. அது பாட்டுக்குப் பத்தி எரிஞ்சுக்கிட்டு இருக்கு. முதல்ல அந்த செய்தியைக் கேட்டு நானே அதிர்ச்சி அடைந்துவிட்டேன். ஆனா, ஒரு உண்மையை ஒத்துக்கொள்ள வேண்டும். "இந்தப் புரளியைக் கேட்க கேட்க உள்ளுக்குள் மகிழ்ச்சியா இருந்தாலும் அப்படி ஒரு விஷயத்துல உண்மை இல்லைன்னு நினைக்கிறப்ப கொஞ்சம் வருத்தமாதான் இருக்கு," என வில்லங்கமாகவே பேசினார். தொடர்ந்து பேசிய அவர், "நயன்தாரா மிகப் பெரிய நடிகை. இன்னும் இருபது ஆண்டுகளுக்கு அவரை யாரும் சினிமாவுல அசைச்சுக்க முடியாது. ஏற்கெனவே அவங்க கதாநாயகியாக நடிச்ச 'இது நம்ம ஆளு' படத்தில் நானும் நகைச்சுவை கதாபாத்திரம் பண்ணியிருக்கேன். அவங்க எல்லாம் எப்படி என் கூட ஜோடியா நடிப்பாங்க?

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!