அதிர்ஷ்ட சீட்டு குலுக்கலில் வென்றவர் தூக்கத்தை இழந்தார்

கோலாலம்பூர்: 4D அதிர்ஷ்ட சீட்டுக் குலுக்கலில் S$2.7 மில்லியன் தொகையை வென்ற மலேசியர் ஒருவர் அளவு கடந்த மகிழ்ச்சியால் இரு நாட்களாக சாப்பிட முடியவில்லை என்றும் தூங்க முடியவில்லை என்றும் கூறியிருக்கிறார். அதிர்ஷ்ட சீட்டுக் குலுக்கலில் வெற்றி பெற்ற மூவரில் 49 வயதான அந்த மலேசியரும் ஒருவர். மார்ச் 25ஆம் தேதி நடந்த அதிர்ஷ்ட சீட்டுக் குலுக்களில் இருவருக்கு பெருந்தொகை பரிசாகக் கிடைத்தது. அவ்விருவரும் ஆளுக்கு 8,515,433.45 ரிங்கிட் தொகையை வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். பிள்ளைகளின் படிப்புச் செலவுக்கும் வீட்டுக் கடனை அடைப்பதற்கும் இப்பணம் உதவியாக இருக்கும் என்று சிலாங்கூரைச் சேர்ந்த அவ்விருவரும் கூறினர். சாபாவைச் சேர்ந்தவருக்கு அதிர்ஷ்ட சீட்டுக் குலுக்கலில் 89,166.85 ரிங்கிட் தொகை கிடைத்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!