102 வயது மாமியாருக்கு 80 வயது மருமகள் கட்டிக்கொடுத்த கழிவறை

கான்பூர்: உத்திரப்பிரதேசத்தில் 102 வயது மாமியாருக்கு அவரது 80 வயது மருமகள் தான் வளர்த்த ஆடுகளை விற்று கழிவறை கட்டிக்கொடுத்துள்ளார். உத்திரப்பிரதேசத்தின் கான்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தனா. இவர் அன்னையர் தினத்தன்று தனது மாமியருக்கு ஒரு பரிசினை வழங்கி அசத்தியுள்ளார். மத்திய அரசு துவங்கிய ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் தூதராக சாந்தனா திகழ்கிறார். கழிவறை கட்டுவதற்கு கிராம நிர்வாகிகள் ஆதரவு அளிக்காததால், தனது தாய் சொந்தமாக கழிவறையைக் கட்டியதாக சாந்தனாவின் மகன் ராம் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.