எஸ்பிஎச் தலைமையில் மாற்றம்

சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் (எஸ்பிஎச்) புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக 55 வயது திரு இங் யட் சுங் செப்டம்பர் முதல் தேதியில் பதவி- யேற்கிறார். நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக ஜூலை 1ஆம் தேதி முதல் இவர் செயல் படுவார். இவர் தற்பொழுது எஸ்பிஎச் குழுமத்தின் சுயேட்சை இயக்குநராகப் பணியாற்றுகிறார். நிறுவனத்தின் நிர்வாக சபை யின் இடர் தவிர்ப்புக் குழுவுக்கும் தலைமை தாங்குகிறார்.

அத்துடன் நிர்வாகக் குழு, சம்பளக் குழு ஆகியவற்றின் உறுப்பினராகவும் உள்ளார். இவருக்கு அடுத்த நிலையில், தற்போதைய துணை தலைமை நிர்வாக அதிகாரியான ஆண்டனி டான், 44 அதே பதவியில் தொடர்வார். எஸ்பிஎச் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஆலன் சானும் துணைத் தலைமை நிர்வாக அதிகாரியான பேட்ரிக் டேனியலும் 2017 செப்டம் பரில் ஓய்வு பெறுகின்றனர். திரு ஆலன் சான், 64, எஸ்பிஎச்சில் தலைமை நிர்வாக அதிகாரியாகக் கடந்த 15 ஆண்டுகளாகப் பொறுப்பு வகித்து வந்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!