சுடச் சுடச் செய்திகள்

இறந்த கோழிகள் விற்பனை; கடைகளில் அதிரடி சோதனை

சென்னை: இறந்துபோன கோழிகளைக் கடைகளில் விற்பதாக எழுந்துள்ள புகாரையடுத்து, சென்னையில் உள்ள கடைகளில் உணவுத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்ட னர். சென்னையில் மட்டும் தினமும் சுமார் 400 டன் கோழிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இவை அனைத்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்படு கின்றன. ஏற்கெனவே இறந்துபோன கோழிகளை இறைச்சிக்கு பயன்படுத்தினால் உடல்நலம் பாதிக்கப்படும். இந்நிலையில், இறந்துபோன கோழிகளையும் சிலர் விற்பதாக புகார் எழுந்துள் ளது. இதையடுத்து சென்னையில் உள்ள கோழிக்கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் சில கடைகளில் கோழிகள் செத்துக் கிடந்ததையும் அதை குப்பையில் போடாமல் விற்பதற்காக வைத்து இருந்ததையும் கண்டுபிடித்துப் பறிமுதல் செய்தனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon