சுடச் சுடச் செய்திகள்

மலேசியாவில் தொடர் மழை காரணமாக காய்கறி விலைகள் உயர்வு

மோசமான வானிலை காரணமாக மலேசிய பண்ணைகளில் காய்கறி உற்பத்தி குறைந்துள்ள வேளையில் காய்கறி விலைகள் 20 விழுக்காடு வரை உயர்ந்துள்ளன. இதனால் மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் காய்கறிகளின் அளவும் குறைந்துள்ளது என்று ‌ஷின் மின் சீன நாளிதழ் நேற்று தெரிவித்தது. சிங்கப்பூரில் காய்கறி விற்பனை- யாளர்கள் தெரிவிக்கையில் ‘செலரி’ கீரை, வெங்காயத் தழை, கொத்தமல்லித் தழை ஆகிய- வற்றின் விலைகளில் பெரும் பாதிப்பு இருக்கும் என்று அந்த நாளிதழ் குறிப்பிட்டது. ஈரச் சந்தைகளில் ‘செலரி’ கீரையின் விலை 20 விழுக்காடு உயர்ந்து கிலோ ஒன்று $6க்கு விற்கப்படுகிறது. வெங்காயத் தழையின் விலை ஒரு வெள்ளி அதிகரித்து கிலோ ஒன்று $7க்கு விற்பனையாகிறது. கொத்த மல்லி தழையின் விலை இரண்டு வெள்ளி அதிகரித்து கிலோ ஒன்று $16க்கு விற்கப் படுகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon