குடிநீர் ‘கேன்’ உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

சென்னை: தமிழகத்தில் ‘கேன்’ களில் அடைத்து விற்கப்படும் குடிநீரை வாங்கும் கலாசாரம் நகரப் பகுதிகள் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், குடிநீர் ‘கேன்’ களுக்கு மத்திய அரசு 18% பொருள், சேவை வரியை (ஜிஎஸ்டி) அறிவித்துள்ளது. ஜிஎஸ்டி வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்நிலையில், இந்த வரிவிதிப் பால் தங்களின் தொழில் கடுமை யாகப் பாதிக்கப்படும் என்றும் அதனால் ஜிஎஸ்டி வரியை உடனே நீக்கவேண்டும் என்றும் கோரி, குடிநீர் ‘கேன்’ உரிமையாளர்கள் நேற்று முன்தினம் மாலையிலிருந்து காலவரம்பற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின் றனர். இதனால், தமிழகத்தில், குறிப் பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு அபாயம் ஏற் படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் தற்போது பரவ லாக வறட்சி நிலவுவதால் ‘கேன்’ குடிநீர் விநியோகமே 90% குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்கிறது. நாளொன்றுக்குச் சராசரியாக ஏ ழு முதல் பத்து லட்சம் ‘கேன்’கள் சென்னை முழுவதும் விநியோகம் செய்யப்படுகிறது.