தினே‌ஷுக்கு வாய்ப்பு: விராத் கோஹ்லி சூசகம்

லண்டன்: எட்டு நாடுகள் பங்குபெறும் சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கி லாந்தில் இன்று தொடங்குகிறது. லண்டன் ஓவல் விளையாட்டரங்கில் நடக்கும் முதல் ஆட்டத்தில் இங்கி லாந்தும் பங்ளாதே‌ஷும் மோது கின்றன. இந்தத் தொடரில் ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானுடன் வரும் 4ஆம் தேதி மோதவிருக்கிறது. அந்த ஆட்டத்தில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் களமிறங்க வாய்ப்பு இருப்பதாக இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

பங்ளாதேஷ் அணிக்கெதிராக நேற்று முன்தினம் நடந்த 2வது பயிற்சிப் போட்டியில் 94 ஓட்டங் களை விளாசிய தினேஷ் கார்த்திக் கின் ஆட்டத்தைக் கண்டு கோஹ்லி அசந்துபோனதாகத் தெரிகிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 240 ஓட்ட வித்தியாசத்தில் பெரும் வெற்றி பெற்றது. முதலில் பந்தடித்த இந்திய அணியில் ‌ஷிகர் தவான் (60), தினேஷ் (94), ஹார்திக் பாண்டியா (80*) ஆகி யோர் அபாரமாக விளையாட, அந்த அணி 50 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 324 ஓட்டங் களைக் குவித்தது.

பங்ளாதே‌ஷுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 77 பந்துகளில் எட்டு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 94 ஓட்டங்களை விளாசிய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக். படம்: ஏஎஃப்பி

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!