தமிழ்நாட்டுக்கு கம்போடியா, மலேசியாவில் இருந்து மணல்

சென்னை: தமிழ்நாடு மணலை இறக்குமதி செய்யப்போகிறது. மூன்றில் ஒரு பங்கு விலையில் வெளிநாடுகளிலிருந்து தமிழ் நாட்டிற்கு மண் இறக்குமதி யாகும் என்று தெரிகிறது. இதற்காக மலேசியா, கம் போடியா உள்ளிட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகளைத் தமிழக அரசு நாடுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மணல் பற்றாக்குறை காரண மாக தமிழ்நாட்டில் கட்டுமானப் பணிகள் முடங்கிக் கிடக்கின் றன. அரிதாக கிடைக்கும் மண லும் ஒரு கனஅடி 120 ரூபாய் விலைக்கு விற்கப்படுகிறது.

மணல் இன்றி கட்டுமானத் துறைப் பணிகள் முடங்கிக் கிடப்பதால் ஆயிரக்கணக்கான தொழிலாளிகளுக்கு வேலை யில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு இந்திய கட்டுமானக் காரர்கள் சங்கம், மலேசியா, கம்போடியாவிலிருந்து ஒரு கனஅடி ரூ.35 என்ற விலைக்கு மணலை இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது. இந்தச் சங்கத்தில் தமிழ் நாட்டில் சுமார் 12,000 உறுப் பினர்கள் இருக்கிறார்கள். மணல் இறக்குமதி தொடர் பில் இந்தச் சங்கம் மலேசியா, கம்போடியா நாடுகளில் உள்ள தனியார் நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி வருகிறது. “தமிழ்நாட்டில் மணல் பற் றாக்குறை உச்சமடைந்து விட் டது. விலையும் கூடிவிட்டது. இந்த நிலையில் மலேசியாவின் ஆற்றுப் படுகைகளிலிருந்து மணல் இறக்குமதி செய்வதால் ஏராள பலன் உண்டு,” என்று இந்தச் சங் கத்தின் தென் இந்திய அமைப்பின் கவுரவ செயலாளர் எஸ் ராமபிரபு தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் கனஅடி ரூ. 120 கொடுத்து மண்ணை வாங்கினாலும் அந்த மணல் கட்டுமானத்திற்கு ஏற்றதாக இல்லை என்று குறிப்பிட்ட அவர், இறக்குமதி செய்யும் மணல் நல்ல தரத்துடன் இருக்கும் என்றும் விலையும் மூன்றில் ஒரு பங்கு தான் என்றும் கூறினார். இந்தச் சங்கம் பேச்சு வார்த்தை நடத்தி வரும் மலேசியாவின் தனி யார் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் 200,000 டன் ஆற்று மணலை ஏற்றுமதிச் செய்ய முன்வந்திருப் பதாக அவர் கூறினார். மலேசியாவைச் சேர்ந்த மேலும் இரண்டு நிறுவனங்கள் மணல் ஏற்றுமதிக்கு முன்வந்திருப்பதால் ஒவ்வொரு மாதமும் 600,000 டன் மணல் இறக்குமதியாகும் என்றும் இது சென்னை மணல் தேவையைப் பூர்த்தி செய்துவிடும் என்றும் ராமபிரபு தெரிவித்தார். கம்போடியாவிலிருந்து ஆற்று மண்ணை இறக்குமதி செய்வதன் தொடர்பில் இந்தச் சங்கம் பேச்சு நடத்தி வருவதாகவும் அவர் கூறி னார். தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கு அன்றாடம் 60,000 டன் மணல் தேவைப்படுகிறது என்று ஒரு கணக்கீடு குறிப்பிடுகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சின்மயானந்துக்கு எதிராக ஆதாரம் வேண்டும் என்பதால் அவரது மூக்குக் கண்ணாடியிலேயே கேமரா பொருத்தி, அவரது நடவடிக்கைகளைக் காணொளியாகப் பதிவு செய்ததாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார். கைதான சின்மயானந்தை 14 நாட்கள் சிறையில் அடைக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

21 Sep 2019

பாலியல் புகாரில் முன்னாள் அமைச்சருமான பாஜக மூத்த தலைவருமான சுவாமி சின்மயானந்த்

நடிகர் விஜய். படம்: ஊடகம்

21 Sep 2019

நடிகர் விஜயின் பேச்சுக்கு வரவேற்பு