சுடச் சுடச் செய்திகள்

மராவி நகரில் போராளிகளின் பணம் பறிமுதல்

மணிலா: பிலிப்பீன்சின் தென் பகுதியில் உள்ள மராவி நகருக் குள் ஊடுருவியுள்ள போராளி களுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே சண்டை நீடிக்கும் வேளையில் போராளிகளுக்குச் சொந்தமான 79 மில்லியன் பெசோ மதிப்புள்ள (S$2.2 மில்லியன்) ரொக்கத்தையும் காசோலைகளையும் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர். மராவி நகரின் ஒரு வட்டாரத் தில் உள்ள ஒரு காப்பறைக்குள் அந்தப் பணம் கண்டுபிடிக்கப் பட்டதாக ராணுவப் பேச்சாளர் ஒருவர் கூறினார். அனைத்துலக பயங்கரவாத அமைப்புகளிடமிருந்து அந்தப் போராளிகளுக்கு நிதி உதவி கிடைத்து வந்திருப்பது இதன் மூலம் தெரியவந்துள்ளதாகவும் அப்பேச்சாளர் சொன்னார்.

நூற்றுக்கணக்கான போராளி கள் கடந்த மே மாதம் 23ஆம் தேதி மராவி நகருக்குள் புகுந்து பல பகுதிகளை தங்கள் கட்டுப் பாட்டில் கொண்டுவந்தனர். அதனைத் தொடர்ந்து போராளி களுக்கு எதிராக ராணுவத்தினர் கடுமையாகச் சண்டையிட்டு வரு கின்றனர். பல பகுதிகளை ராணுவத்தினர் மீட்டுள்ள போதி லும் இன்னும் சில பகுதிகள் போராளிகள் வசம் உள்ளன. குடியிருப்பாளர்கள் 2,000 பேர் அப்பகுதியில் சிக்கியுள்ளனர்.