சிறிதளவும் பந்தா காட்டாத வாரிசு நடிகர்

இயக்குநரும் நடிகருமான தம்பி ராமய்யாவின் வாரிசு உமாபதியும் நடிக்க வந்திருக்கிறார். அவர் நடிப்பில் உருவான ‘அதாகப்பட் டது மகாஜனங்களே’ திரைப்படம் இம்மாதம் 16ஆம் தேதி வெளியீடு காண உள்ளது. சந்திரசேகர் இயக்கியுள்ள இப்படத்துக்கு டி.இமான் இசை யமைத்துள்ளார். பாடல்களை யுக பாரதி எழுதியுள்ளார். பொதுவாக பிரபல கலைஞர் கள் தங்கள் வாரிசுகளைக் கள மிறக்கும்போது பெரிய அளவில் செலவு செய்வது வழக்கம். ஆனால் தம்பி ராமய்யாவோ மகனாக இருந்தாலும் அடக்கி வாசிக்கிறார். “என் மகன் என்னுடைய செல்வாக்கை வைத்து மேலே வரக்கூடாது. அதே சமயம் அவர் திறமைசாலி என்பதால் அவருக் குரிய தார்மீக உதவிகளைச் செய்ய தகப்பன் என்ற வகையில் கடமைப்பட்டுள்ளேன். அதை மட் டுமே நான் செய்கிறேன். மற்றபடி வெற்றி பெறுவது அவர் கையில்தான் உள்ளது,” என்கிறார் தம்பி ராமய்யா.

‘அதாகப்பட்டது மகாஜனங்கே’ படத்தில் உமாபதி, ரேஷ்மா.