இரட்டை தாக்குதலில் ஈரான் அதிர்ந்தது

தெஹ்ரான்: ஈரானிய நாடாளு மன்றக் கட்டடத்திலும் ஈரானை நிறுவிய புரட்சித்தலைவரின் கல்ல றையிலும் ஒரே சமயத்தில் துப் பாக்கித் தாக்குதலும் தற்கொலைத் தாக்குதலும் நடத்தப்பட்டன. தெஹ்ரானில் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான தாக்குதல் இது எனக் கூறப் படுகிறது. ஈரானியத் தலைநகரில் நடந்த இந்த இரட்டைத் தாக்குதலில் குறைந்தது 12 பேர் கொல்லப் பட்டதோடு பலர் காயமடைந்ததாக அரசாங்க ஊடகம் தெரிவித்தது. மூன்றாவது தாக்குதல் முறி யடிக்கப்பட்டதாக ஈரானிய வேவுத் துறை அமைச்சு கூறியது. தாக்குதலைத் தொடர்ந்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு உடனடியாகப் பொறுப்பேற்றுக்கொண்டது. ஐஎஸ் போராளிகள் தாக்குதலை நடத்திய தாக அமாக் எனும் அதன் ஊடகப் பிரிவு கூறியது. ஆனால், இதற்கு எந்தவித ஆதாரத்தையும் அது வெளியிடவில்லை.

இதுநாள்வரை, தெஹ்ரான் பாதுகாப்பான நகரமாக இருந்து வந்தது. சிரியாவின் உள்நாட்டுப் போரில் பங்குபெறும் மற்ற நாடுகளுக்கு எதிராக அடிக்கடி நடத்தப்படும் தாக்குதல்களி லிருந்து ஈரான் ஓரளவு தப்பித் திருந்தது. தாக்குதல் தொடங்கி சுமார் ஐந்து மணி நேரத்திற்குள் பிற்பகல் சுமார் 3 மணியளவில் (சிங்கப்பூர் நேரப்படி மாலை 6.30 மணி), தாக்குதல்காரர்கள் அனைவரும் கொல்லப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தனர். பெண்களைப் போல ஆடை அணிந்திருந்த துப் பாக்கிக்காரர்கள், மத்திய தெஹ் ரானில் அமைந்துள்ள நாடாளு மன்றக் கட்டடத்தின் பிரதான நுழைவாயில் வழியாக உள்ளே புகுந்து தாறுமாறாகச் சுட்டதாக ஈரானின் உள்துறை துணை அமைச்சர் முகம்மது ஹுசேன் ஸுல்ஃபகாரி அரசாங்கத் தொலைக்காட்சியிடம் கூறினார். தாக்குதல்காரர்கள் சிலரைப் பிணைப்பிடித்ததாகவும் குறைந் தது ஒரு தாக்குதல்காரர் தற் கொலை வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாகவும் அறியப்படுகிறது.

ஈரான் நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடைபெற்றபோது சிறுவனை பாதுகாப்பாக மீட்ட அதிகாரிகள். படம்: ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

94 வயதிலும் சாவகாசமாக குதிரை சவாரி செய்த டாக்டர் மகாதீர். படம்: இணையம்

16 Sep 2019

புகைமூட்டம் சூழ குதிரை சவாரி செய்த மலேசிய பிரதமர்

இந்தியாவுடன் போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் தோல்வியைத் தழுவும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். படம்: ராய்ட்டர்

16 Sep 2019

இம்ரான் கான்: இந்தியாவுடனான போரில் பாகிஸ்தான் தோற்கும்