இயக்குநர் விஜய் படத்தில் ஒப்பந்தமானார் சாய் பல்லவி

‘வனமகன்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் மும்முரமாக இருக்கும் இயக்குநர் ஏ.எல்.விஜய். அடுத்து ‘கரு’ என்ற தலைப்பில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளாராம். இது பெண்களுக்கான முக்கியத்துவத்தை வலியுறுத்தும் படமாம். இதில் கதாநாயகியாக நடிக்க சாய் பல்லவி ஒப்பந்தமாகி உள்ளா ராம். மலையாளத் திரையுலகில் அறி முகமாகி, தமிழிலும் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகி ஆகிவிட்டார் சாய் பல்லவி. தற்போது ‘ஃபிடா’ தெலுங்குப் படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்