சிங்கப்பூருக்கு மணல் ஏற்றுமதி செய்வதற்கு கம்போடியா தடை

கம்போடியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு மணல் ஏற்றுமதி செய்வதற்கு அந்நாடு தடை விதித்துள்ளது. இந்தோனீசியாவின் சுரங்கம் மற்றும் திறன் வளத்துறை அமைச்சு நேற்று இதனை அதி காரபூர்வமாக அறிவித்தது. பல ஆண்டுகளுக்கு சிங்கப்பூருக்கு கம்போடியா மணல் ஏற்றுமதி செய்து வந்தது. அது இப்போது அதிகாரபூர்வமாக முடிவுக்கு வந்துள்ளதாக அந்நாடு அறிவித் துள்ளது. சிங்கப்பூரின் விரிவாக்கத் திற்கு கம்போடியாவில் இருந்து மண் அனுப்பப்பட்டு வந்ததாகவும் இனி சிங்கப்பூர், வேறு எங்காவது இருந்து மணலை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும் என்றும் அந்த அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

கம்போடியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு மணல் ஏற்றுமதி செய்வதை நிறுத்தும்படி அங் குள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழுக்கள் அரசாங் கத்திற்கு நெருக்கடி கொடுத்து வந்தன. கடலோரப் பகுதிகளில் மணல் தோண்டி எடுக்கப்படுவதால் சுற்றுச்சூழலும் சுற்றுவட்டார நிலங்களும் மோசமாகப் பாதிக்கப் படுவதாக சுற்றுச்சூழல் பாதுகாப் புக் குழுக்கள் அச்சம் தெரிவித்து வந்தன. அதைத் தொடர்ந்து கம்போடிய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விதிக்கப்பட்டிருந்த தற்காலிகத் தடையின்போது சட்டத்திற்குப் புறம்பாக மணல் ஏற்றுமதி செய் யப் பட்டதாக அந்தக் குழுக்கள் புகார் கூறியுள்ளன.

“சுற்றுச்சூழல் குழுக்களின் அக்கறையை அரசு செவிமடுக்கிறது. அவர்கள் கூறுவதைப்போல் பெரிய அள வில் மணல் சுரண்டப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும் என்று அந்த அமைச்சின் பேச்சாளர் மெக் சக்தியரா கூறி னார். சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழுவினரின் அச்சம் சரியானதே, பெரிய அளவில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தால் மணல் ஏற்றுமதிக்கு அரசாங்கம் தடை விதிக்கிறது,” என்று அவர் கூறினார். கம்போடியாவில் இருந்து சிங்கப்பூருக்கே ஆக அதிகளவில் மணல் ஏற்றுமதி செய்யப்பட்டது. 2007ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை சுமார் 16 மில்லியன் டன் எடை மணல் சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப் பட்டுள்ளதாக அவர் கூறினார். ஆனால் ஐக்கிய நாடுகள் மன்றம் வெளியிட்ட புள்ளிவிவர அறிக் கையில் மியன்மாரில் இருந்து சிங்கப்பூருக்கு 72 மில்லியன் டன் எடை மணல் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படு கிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஈசூனில் உள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில் வாங்கப்பட்ட அந்த அர்ச்சனைச் சீட்டில் நயன்தாராகுரியன், திருவோண நட்சத்திரம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. படங்கள்: ஊடகம்

21 Nov 2019

நயன்தாராவின் பெயரில் சிங்கப்பூர் கோயிலில் அர்ச்சனை செய்த ரசிகர்

‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ வாசகர்கள் அனுப்பிய படம். படங்கள்: வீ மெய்லின், மார்க் சியோங்

21 Nov 2019

மரம் விழுந்து கார் சேதம்: காயமின்றி தப்பித்தார் 71 வயது ஓட்டுநர்

2017 ஜூலையில் இடிந்து விழுந்த மேம்பாலம். உள்படம்: ஐந்து குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் பொறியாளர் ராபர்ட் அரியான்டோ ஜன்ட்ரா, 46.
படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

21 Nov 2019

மேம்பாலம் இடியும் முன்னரே வடிவமைப்பு தவறுகள் பொறியாளருக்குத் தெரியும்