தக்காளி, வெங்காயம் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை

சென்னை: தக்காளி, வெங்காயம் விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு உறுதி அளித்துள்ளார். சட்டப் பேரவை யில் நேற்று முன்தினம் கேள்வி நேரம் முடிந்த பிறகு நேரமில்லா நேரத்தில் பேசிய எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், “தற்போது சந்தையில் தக்காளி, சின்ன வெங் காயம் ஆகியவை கிலோ 100 ரூபாய் வரை விற்கப்படுவதாகக் கூறினார். இவற்றை அரசின் கூட்டுறவு அங்காடிகள் மூலம் நியாயமான விலைக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப் படுமா?,” என்று வினவினார். அதற்குப் பதிலளித்த கூட்டு றவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, அத்தியாவசியப் பொருட் களின் விலை உயரும்போது அந்த பொருட்களின் விலையை குறைக்க மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து நிதியம் ஒன் றை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரி வித்தார்.

தற்போது தக்காளி, சின்ன வெங்காயத்தின் வரத்து குறை வாக இருப்பினும் பண்ணைப் பசுமைக் காய்கறி கடைகளில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 40 ரூபாய்க்கு விற்கப்படுவதாக வும் அவர் தெரிவித்தார். அதே போல தக்காளியின் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜு உறுதியளித்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon