5.21 மி. பயணிகளைக் கையாண்ட சாங்கி விமான நிலையம்

சாங்கி விமான நிலையம் சென்ற ஜூன் மாதத்தில் 5.21 மில்லியன் பயணிகளைக் கையாண்டுள்ளது. 2016 ஜூன் மாதத்துடன் ஒப்பு நோக்க இது 7.7% அதிகம். எல்லா வட்டாரங்களில் இருந் தும் சிங்கப்பூருக்கு வந்து சென்ற பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததே இந்த உயர்வுக்குக் காரணம் என சாங்கி விமான நிலையக் குழுமம் தெரிவித்தது. ஆக அதிகமாக, ஆண்டு அடிப்படையில் பார்க்கும்போது இந்தியப் பயணிகளின் எண் ணிக்கை 25% கூடியுள்ளது. அதற்கடுத்ததாக, சிங்கப்பூருக்கு வந்து சென்ற வியட்னாமியப் பயணிகளின் எண்ணிக்கை 12% அதிகரித்தது. கடந்த ஜூன் மாதத்தில் ஆக அதிகமாக பேங்காக் நகரத்திற்கும் அதற்கு அடுத்தபடியாக கோலா லம்பூருக்கும் விமானச் சேவைகள் இடம்பெற்றன.

இவ்வாண்டின் முதல் ஆறு மாத காலத்தில் சாங்கி விமான நிலையம் 5.7% கூடுதலாக, அதாவது 30.4 மி. பயணிகளைக் கையாண்டுள்ளது. தென்கிழக்கா சியா, வடகிழக்காசியா, தெற்கு ஆசியா ஆகிய வட்டாரங்களில் இருந்து அதிகமானோர் வந்து சென்றதே இதற்குக் காரணம் என்று கூறப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் மட்டும் சாங்கி விமான நிலையம் வழியாக இரண்டு மில்லியனுக்கும் மேற்பட் டோர் இந்தியா-சிங்கப்பூர் இடையே பயணம் செய்தனர். அதேபோல, வந்து சென்ற விமானங்களின் எண்ணிக்கையும் 3%, அதாவது 30,920 ஆக உயர்ந்தது.