சுடச் சுடச் செய்திகள்

கம்போடியாவில் மன்னன் ஏழாம் ஜெயவர்மன் காலத்து அரிய சிலை கண்டுபிடிப்பு

கம்போடியாவின் ஆதிகாலத்து மருத்துவமனை ஒன்றில் பல நூறாண்டுகள் பழமையான சிலையை தொல்பொருள் ஆய் வாளர்கள் கண்டெடுத்துள்ளனர். புகழ்பெற்ற அங்கோர் ஆலய வளாத்தில் அந்த 2 மீட்டர் உயர முள்ள அரிய மணற்சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை அது தோண்டி எடுக்கப்பட்டதாக ஆலய வளாகத்தை நிர்வகிக்கும் அர சாங்க அமைப்பான அப்சரா ஆணையத்தின் பேச்சாளர் லோங் கோசல் தெரிவித்தார்.

கடந்த 12ஆம் அல்லது 13ஆம் நூற் றாண்டைச் சேர்ந்ததாக அந்தச் சிலை இருக்கலாம் என்று அவர் தெரிவித்தார். மன்னர் ஏழாம் ஜெயவர்மனின் ஆட்சிக்காலத்தில் அங்கோ வாட் டில் மருத்துவமனை கட்ட நிலத்தைத் தோண்டியபோது 40 சென்டி மீட்டர் ஆழத்தில் அச் சிலை புதைக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டதாக கம்போடிய தொல்பொருள் ஆய்வாளர்களும் சிங்கப்பூரின் யூசோப் இஷாக் கல்விக்கழக நிபுணர்களும் தெரி வித்துள்ளனர். மருத்துவமனையின் பாது காவலனாக விளங்கும் வகையில் அந்தச் சிலையை மன்னன் புதைத் ததாக வரலாறு கூறுகிறது.

சிலையின் கை, கால்கள் உடைக்கப்பட்டிருந்தபோதிலும் தலையும் உருவமும் பழங்காலப் பெருமையுடன் திகழ்வதாக நிபு ணர்கள் கூறுகின்றனர். ஏழாம் ஜெயவர்மன் பௌத்த மதத் தின்பால் ஈர்க்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கோர் வாட் நகரத்தை நிறு விய 100 ஆண்டுகளுக்குப் பிறகு 12, 13ஆம் நூற்றாண்டில் அந்த மன்னன் தனது வெற்றியின் அடையாளமாக அங்கோர் தோம் (angkor thom) என்ற நகரத் தையும் நடுவில் ஒரு பௌத்த ஆலயத்தையும் நிறுவினார் என் பது வரலாறு. பின்னர் வந்த எட்டாம் ஜெயவர்மன் இந்து சமயத்தைத் தழுவியவர் என்றும் பௌத்த சின்னங்களை அழித் தார் என்றும் கூறப்படுகிறது. கம்போடியாவின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாகத் திகழும் அங் கோர் தொல்பொருள் பூங்கா வளாகத்தில் கெமர் பேரரசின் 9ஆம் நூற்றாண்டு தொடங்கி 15ஆம் நூற்றாண்டு வரையிலான பல அரிய பொக்கிஷங்கள் இடம் பெற்றுள்ளன.

கம்போடிய, சிங்கப்பூர் தொல்பொருள் ஆய் வாளர்களால் தோண்டி எடுக்கப்பட்ட சிலை. படம்: கம்போடியாவின் அப்சரா ஆணையம்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon