‘மலேசிய தேர்தல் செய்தி ஒரு வதந்தி’

ஊடகங்களில் வெளியாகியுள்ள 14வது பொதுத் தேர்தல் தொடர்பான செய்தியை மலேசிய தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெறவிருப் பதாகவும் அதற்கான வேலைகளுக்கான பயிற்சி களில் அதிகாரிகள் ஈடுபடுவது போன்றும் காணொளி ஒன்று ‘வாட்ஸ்அப்’ மூலம் வேக மாகப் பரவி வருகிறது. அந்த 39 வினாடி காணொளியில் வரும் அக்டோபர் மாதத்தில் பொதுத்தேர்தல் நடைபெறக்கூடும் என்று அறையில் கூடியிருந்தவர்களிடம் ஒருவர் விளக்குவது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. மேலும் தேர்தல் ஆணையத்தின் மஞ்சள் நிற தடுப்பு நாடாவும் அதில் காணப்பட்டது.

இதனை அறிந்த மலேசிய தேர்தல் அதிகாரி ஒருவர் பொதுத் தேர்தல் இப்போதைக்கு நடைபெறாது என்று கூறினார். கடந்த ஞாயிற்றுக்கிழமை கிளந்தானில் தேர்தல் பணி கள் பற்றி பணியாளர்களுக்கு பொதுவாக விளக்கப்பட்டதை உருவகப்படுத்தி உண்மை யான அறிவிப்புபோல தகவல் வெளியிடப்பட்டு உள்ளதாக அவர் கூறினார். “தேர்தல் நேரப் பணிகளுக்கான பயிற்சி களை அளித்து ஊழியர்களைத் தயார்ப்படுத்து வது தேர்தல் ஆணையத்தின் வழக்கமான பணிகளில் ஒன்று. இது ஒரு பயிற்சிதான். மலேசியாவின் அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் ஆணையம் இப்பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது,” என்றும் அந்த அதிகாரி விளக்கியுள்ளார். பொதுத் தேர்தலை நடத்த அடுத்த ஆண்டு ஆகஸ்ட் வரை அவகாசம் உள்ளது-. ஆயினும், ஆண்டின் தொடக்கத்தில் அல்லது செப்டம்பர், -அக்டோபர் மாதத்தில் தேர்தல் நடைபெறலாம் என ஊகத் தகவல்கள் பரவி வருகின்றன.