வேலையிட மரணம் பாதியாகக் குறைவு

வேலையிடங்களில் உயிரிழப்போர் எண்ணிக்கை இவ்வாண்டின் முதல்பாதியில் வெகுவாகக் குறைந்திருக்கிறது. முதல் ஆறு மாதங்களில் வேலையிடங்களில் 19 பேர் உயி ரிழந்தனர். சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் நேர்ந்த 42 மர ணங்களைவிட இது குறைவு என மனிதவள அமைச்சும் வேலை யிடப் பாதுகாப்பு, சுகாதாரக் கழ கமும் நேற்று வெளியிட்ட புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. உயிரிழந்த 19 பேரில் ஐவர் உற்பத்தித் துறையில் வேலை செய்தவர்கள். கட்டுமானத் தளங் களில் இருவர் உயிரிழந்தனர்.

வேலையிட மரணங்களுக்கான இரு முக்கிய காரணங்கள் போக்கு வரத்து விபத்துகளும் உயரத்திலி ருந்து கீழே விழுவதும் என தெரிவிக்கப்பட்டது. இவ்வாண்டின் முதல் பாதியில் ஏழு தொழிலாளர்கள் போக்கு வரத்து விபத்துகளில் உயிரிழந்த னர். சென்ற ஆண்டு இதே கால கட்டத்தில் பத்துப் பேர் போக்கு வரத்து விபத்துகளில் உயிரிழந் தனர். இவ்வாண்டின் முதல் பாதியில் நால்வர் கீழே விழுந்து அல்லது வழுக்கி விழுந்து உயிரி ழந்தனர். சென்ற ஆண்டு இதே கால கட்டத்தில் இந்தக் காரணங் களால் 16 தொழிலாளர்கள் உயிரி ழந்தனர். இவ்வாண்டு இதுவரை இரு தொழிலாளர்கள் நெருப்பிலும் வெடிப்புகளிலும் மாண்டனர்.