வெளிநாடுவாழ் இந்தியர்கள் வாக்களிக்க புதிய ஏற்பாடு

ஆட்சியாளர்களைத் தேர்வுசெய்ய வாய்ப்பு கிட்டும் வகையில் தங் களுக்கும் வாக்குரிமை வழங்கப் படவேண்டும் எனும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் நீண்ட காலக் கோரிக்கை விரைவில் நிறைவேற இருக்கிறது. வெளிநாடுவாழ் இந்தியர் கள் வேறு ஒருவர் மூலமாக தங்களுக்கு வாக்குரிமை உள்ள தொகுதிகளில் தங்களது வாக்குகளைப் பதிவு செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

வெளிநாடுவாழ் இந்தியர்களின் இந்தப் ‘பதிலி’ வாக்களிப் புக்கு வகைசெய்யும் விதமாக இந்திய அரசாங்கம் கூடிய விரைவில் அது தொடர்பான மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் எனத் தெரி விக்கப்பட்டது. இதையடுத்து, வெளிநாடு களில் வசிக்கும் சுமார் 16 மில்லியன் இந்தியர்கள், தங்கள் சார்பில் இன்னொருவரை நிய மித்து தங்களது வாக்குகளைச் செலுத்த முடியும். “முந்தைய தலைமுறை வெளிநாடுவாழ் இந்தியர்கள், இந்தியாவைவிட்டு வெளியேறு வதிலேயே குறியாக இருந்தனர். ஆனால் இப்போதைய தலை முறையினர் அப்படி இல்லை. அவர்கள் இந்தியாவை அதிகம் நேசிக்கின்றனர்.