மனிதவளத் துறையில் நிபுணத்துவம்: புதிய கல்வி உதவி நிதி

மனித வளத் துறையில் புதிய கல்வி உதவி நிதி அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. சிங்கப்பூர் தொழில்துறை கல்வி உபகாரச் சம்பளத்தின் கீழ் வழங்கப்படும் இந்தக் கல்வி உதவி நிதியை மனித வளத் துறையில் உள்ளவர்கள் பட்டக்கல்விக்குப் பின்னர் தங்களது நிபுணத்துவத்தை மேம்படுத்தப் பயன்படுத்தலாம் என்று கல்வி அமைச்சு தெரிவித்தது. மனிதவளம் குறைந்த பொருளியலை நோக்கி சிங்கப்பூர் செல்லும் நிலையில், நிறுவனங்கள் தங்களது திறனாளர் களைத் தக்கவைத்துக் கொள்வதற்கான முயற்சிகளை மேற் கொள்ள வேண்டியுள்ளது. எனவே, மனிதவள ஊழியர்கள் வர்த்தகத்தை மாற்றியமைக்க உதவுவதுடன் ஊழியர்கள் புதிய பணிகளை மேற்கொள்வதற்கான திறன்களைப் பெறவும் உதவ வேண்டும் என்று ஊழியர்துறை நிபுணர்கள் கூறினர்.

ஒரு கல்வியாளர் $10,000 வரை உதவி நிதியைப் பெறலாம். தேவையான திறன்களைப் பெறவும் பட்டக் கல்விக்குப் பிந்திய நிபுணத்துவ மேம்பாட்டுக்கும் இந்த நிதியைப் பயன்படுத்த லாம். 2012ல் தொடங்கப்பட்ட சிங்கப்பூர் தொழில்துறை கல்வி உபகாரச் சம்பளம், இந்த உபகாரச் சம்பளத்தைப் பெறுவோருக்கு ஆதரவு வழங்கும் நிறுவனங்களில் பணியைத் தொடங்க வாய்ப்பளிக்கிறது. நேற்று மொத்தம் 117 பேர் இந்த உபகாரச் சம்பளத்தைப் பெற்றனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஈசூனில் உள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில் வாங்கப்பட்ட அந்த அர்ச்சனைச் சீட்டில் நயன்தாராகுரியன், திருவோண நட்சத்திரம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. படங்கள்: ஊடகம்

21 Nov 2019

நயன்தாராவின் பெயரில் சிங்கப்பூர் கோயிலில் அர்ச்சனை செய்த ரசிகர்

‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ வாசகர்கள் அனுப்பிய படம். படங்கள்: வீ மெய்லின், மார்க் சியோங்

21 Nov 2019

மரம் விழுந்து கார் சேதம்: காயமின்றி தப்பித்தார் 71 வயது ஓட்டுநர்

2017 ஜூலையில் இடிந்து விழுந்த மேம்பாலம். உள்படம்: ஐந்து குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் பொறியாளர் ராபர்ட் அரியான்டோ ஜன்ட்ரா, 46.
படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

21 Nov 2019

மேம்பாலம் இடியும் முன்னரே வடிவமைப்பு தவறுகள் பொறியாளருக்குத் தெரியும்