இரவிலும் நீடிக்கும் தொல்லைகள் - பிரியங்கா சோப்ரா

எந்த விஷயம் அல்லது விவகாரமாக இருந்தாலும், தன் மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்லத் தயங்காதவர் இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா. இவரது அதிரடி பேட்டிகள் அவ்வப்போது வெளியாகி பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தும். திரையுலகில் புதுமுக நடிகைகளுக்குத் தான் வெளியில் சொல்லமுடியாத தொல்லைகள் ஏற்படும் என்று கூறுவர். ஆனால் பிரியங்காவோ முன்னணி நடிகையாக வளர்ந்த பிறகும் கூட, தனக்கு இத்தகைய தொல்லைகள் குறையவில்லை என்கிறார். சில கதாநாயகர்களும் பிரபல நடிகர்களும் இப்போதும் கூட அடிக்கடி நள்ளிரவில் தொலைபேசி வழி தொடர்பு கொண்டு தொல்லை கொடுக்கிறார்களாம். அந்த நடிகர்கள் பேசும் காதல் வார்த்தைகளைக் கேட்டால் எரிச்சலாக உள்ளது என்றும் அண்மைய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் பிரியங்கா.