200 ஆண்டு பழமையான மரம் விழுந்து 13 பேர் மரணம்

லிஸ்பன்: போர்ச்சுக்கல்லின் மடிரா தீவில் 200 ஆண்டு பழமையான மரம் விழுந்ததில் 13 பேர் இறந்தனர். 49க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இவர்களில் பெரும்பாலோர் மரத்துக்கு அருகே நடைபெற்ற சமய விழாவில் பங்கேற்றவர்கள். காயம் அடைந்தவர்களில் ஆறு பேர் உடல் நிலை மோசமாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். காயம் அடைந்தவர்களில் நால்வர் ஐரோப்பிய நாடு களைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் என்றும் தெரிவிக்கப் பட்டது. இறந்தவர்களில் ஒரு குழந்தையும் அடங்கும்.

Loading...
Load next