விசாரணை வளையத்திற்குள் ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயம்

குற்றவியல் நடவடிக்கைகள் இடம்பெற்றதாக சந்தேகத்தின் பேரில் சிங்கப்பூரின் பழைமையான இந்து ஆலயங்களில் ஒன்றான ஸ்ரீ வீரமாகாளி யம்மன் ஆலய நிர்வாகம் தொடர்பில் விசா ரணை நடந்து வருகிறது. ஆலய நிர்வாகம் குறித்து கருத்துகளைப் பெற்றதை அடுத்து அதுகுறித்து மறுஆய்வு செய்யப்பட்டது என்று அறநிறுவன ஆணை யாளர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். மறுஆய்வில் ஆலய நிர்வாகம் தொடர்பில் அக்கறைக்குரிய சில அம்சங்கள் கண்டறியப் பட்டதாகவும் அறநிறுவன ஆணையாளர் அடுத்தகட்ட நடவடிக்கையைத் தொடங்குமுன் அது குறித்து விசாரணை தேவை என்றும் அந்த அறிக்கை கூறியது. அந்த அக்கறைக்குரிய அம்சங்கள் எவை என்பது தெரிவிக்கப்படவில்லை. 

விசாரணை இடம்பெற்றாலும் சிராங்கூன் ரோடு ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயத்தின் வழக்கமான, அன்றாட நடைமுறைகளுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது என அறநிறுவன ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 

விவரம்: epaper.tamilmurasu.com.sg

Loading...
Load next