குடும்ப மருத்துவம் படியுங்கள்: மாணவர்களுக்கு ஆலோசனை

சிங்கப்பூரில் குடும்ப மருத்துவர்கள் பணி மிக முக்கியமானதாக ஆகி வருகிறது என்று சுகாதார அமைச் சின் மருத்துவ சேவைத்துறை இயக்குநர் பெஞ்சமின் ஓங் தெரி வித்து இருக்கிறார். குடும்ப மருத்துவத்தை வாழ்க் கைத்தொழிலாக கற்கும்படி அவர் மருத்துவப் படிப்பு மாணவர்களை வலியுறுத்தினார். ஒவ்வோர் ஆண்டும் மருத்துவம் படிக்க சேரும் மாணவர்களில் ஒரு சிலரே சிறப்பு வல்லுநர்களாக ஆகிறார்கள் என்பதை அவர் சுட்டினார். முதலாவது தேசிய மருத்துவப் படிப்பு மாணவர்கள் பட்டமளிப்பு நிகழ்ச்சியில் உரை யாற்றிய இணைப்பேராசிரியர் ஓங், மருத்துவப் படிப்பு மாணவர்களின் வாழ்க்கைத்தொழில் விருப்பமும் ஆற்றல் மேம்பாடும் சமூகத்தின் தேவைகளை ஈடுசெய்வதற்கு ஏற்ப இருக்க வேண்டும் என்று வலி யுறுத்தினார்.

நேற்றைய நிகழ்ச்சியில் சுமார் 210 மருத்துவப் படிப்பு மாணவர்கள் கலந்துகொண்டார்கள். பெருமைக் காகவோ பணத்திற்காகவோ புக ழுக்காகவோ மருத்துவம் படிக்கக் கூடாது என்று குறிப்பிட்ட அவர், மருத்துவத்தில் மிகச்சிறப்பு வல்லு நருக்கும் தேவை குறைவு என்றார்.