நீட் தேர்வு: தமிழகம் முழுவதும் நீடிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் போராட்டம்

சென்னை: மாணவி அனிதாவின் மரணத்தை அடுத்து தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன. தலைநகர் சென்னை உட்பட மாநி லத்தின் பல்வேறு பகுதிகளிலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடு பட்டு வருகின்றனர். திருநெல்வேலி, நாமக்கல், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு பொது இடங் களில் கூடி நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு கைதாகி வருகின்றனர். முன்பு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெற்ற தன் னெழுச்சிப் போராட்டத்தைப் போன்றே இப்போதும் போராட்டக் களம் தீவிரமடைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித் துள்ளனர். கடந்த திங்கட்கிழமை முதல் மாணவர்கள் இந்தப் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.

தொடக் கத்தில் வெறும் கண்டன முழக்கங்கள் மட்டுமே எழுப்பி வந்த மாணவர் படை தற்போது சாலை, ரயில் மறியல், உண்ணா விரதம் என போராட்டத்தைத் தீவிரப்படுத்தி உள்ளனர். மாணவி அனிதா சாவுக்கு நீதி கேட்டும், 'நீட்' தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் நேற்று முன்தினம் காலை திருத்தணி ரயில் நிலையத்தில் தலித் மக்கள் முன்னணி சார்பில் 50 பேர் ரயில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் ரயில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. பேச்சுவார்த்தை நடத்தியும் கலைந்து செல்லாததால், 50 பேரை யும் போலிசார் கைது செய்தனர். நேற்று காலை சென்னையில் கல்லூரி மாணவர்கள் பலர் கடற் கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் கூடி அறப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் கடற்கரையில் இவ்வாறு ஒன்றுகூட அனுமதி இல்லை என்று தெரிவித்த போலிசார், உடனடியாக கலைந்து செல்லுமாறு மாணவர்களிடம் கூறினார். ஆனால் இதை ஏற்க மாண வர்கள் மறுக்கவே, அனைவரையும் போலிசார் அங்கிருந்து குண்டுக் கட்டாக அகற்றினர். இதே போல் கிண்டி பகுதியிலும் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!