40 ஆண்டுகளுக்குப் பின் வீடு திரும்பிய கணவன்

கும்பகோணம்: முருக்கங்குடி முதல் கட்டளைப் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய மனைவி அஞ்சம்மாள். மகன் கண்ணப்பன், மகள் காந்தி. கிருஷ்ணமூர்த்தி, அஞ்சம்மாள் ஆகியோருக்கு 45 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகன், ஒரு மகள் பிறந்த நிலையில் மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை பிறந்த சில நாட்களிலேயே இறந்துவிட்டது. இந்நிலையில் மனைவியுடன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி, பின்னர் சில நாட்களில் வீடு திரும்புவது வழக்கமாக இருந்தது. இதேபோல் ஒரு நாள் கோபித்துக் கொண்டு போனவர், போனவர்தான், நாற்பது ஆண்டு கழித்து திரும்பியிருக்கிறார். இத்தனை ஆண்டுகளாக கணவனின் உதவியின்றி கூலி வேலை பார்த்து பிள்ளைகளை ஆளாக்கி அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்திருக்கிறேன் என்று ஆதங்கப்படுகிறார் அவரது மனைவி.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon