சுடச் சுடச் செய்திகள்

இந்து ஆலயம் இடிப்பு: சமரச முயற்சியில் ஜோகூர் சுல்தான்

ஜோகூர் பாரு: ஜோகூரின் மாசாய் மாவட்டத்தில் இந்து ஆலயம் இடிப்பு தொடர்பாக எழுந்துள்ள கருத்துவேறுபாடுகளைத் தணிக் கும் முயற்சியில் ஜோகூர் சுல்தான் நேரடியாக ஈடுபட்டார். ஸ்ரீசிவசக்தி சின்னக்கருப்பர் ஆலய பக்தர்கள் சங்கத்தைச் சேர்ந்த பல்வேறு பிரதிநிதிகளை சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ் கந்தர் தமது புக்கிட் பிலாங்கி அரண்மனையில் சந்தித்துப் பேசி னார். கிட்டத்தட்ட 30 நிமிடம் நடை பெற்ற அச்சந்திப்பின்போது ஆல யத்தை மீண்டும் எழுப்ப மாநில அரசாங்கம் வேறோர் இடத்தை ஒதுக்கித் தரும் என்று சுல்தான் உறுதியளித்தார். ஆலயம் சிங்கப்பூரர் ஒரு வருக்குச் சொந்தமானது என்று நம்பப்படுவதாக ‘த ஸ்டார்’ தெரி வித்தது.

மாசாயில் உள்ள தனியாரின் நிலத்தை ஆக்கிரமித்து அந்த ஆலயம் கட்டப்பட்டு இருந்ததைத் தொடர்ந்து அந்த நிலத்துக்குச் சொந்தக்காரர் நீதிமன்றத்தை நாடி னார். ஆலயத்தை அகற்றும் உத் தரவை அவர் நீதிமன்றம் மூலம் பெற்றார். ஆலயத்தை இடிக்க எதிர்ப்புக் கிளம்பியதைத் தொடர்ந்து ஆலயத் தலைவர்களிடம் பேச்சு நடத்தப் பட்டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon