‘போத்தல் தண்ணீரில் பிளாஸ்டிக் நுண்துகள்கள்’

உலகின் முன்னணி போத்தல் தண்ணீர் விற்பனை நிறுவனங் களின் தண்ணீர் போத்தல்களில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப் பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக வும் தண்ணீரை போத்தலுக்குள் அடைக்கும் நடைமுறைகளின் போது தண்ணீர் இப்படி மாசுபட் டிருக்கலாம் எனவும் 9 நாடுகளின் தண்ணீர் போத்தல் மாதிரிகளைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. 'ஸ்டேட் யுனிவர்சிட்டி ஆஃப் நியூயார்க்'கைச் சேர்ந்த பிளாஸ்டிக் நுண்துகள் ஆய்வாளரான ஷெர்ரி மேசன் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் அமெரிக்காவைச் சேர்ந்த லாபநோக்கற்ற ஊடக அமைப்பால் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன.

பிரேசில், சீனா, இந்தியா, இந்தோனீசியா, கென்யா, லெப னான், மெக்சிகோ, தாய்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து பெறப்பட்ட 250 மாதிரி தண்ணீர் போத்தல்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அக்வா, அக்வாஃபினா, எவி யன், டாசானி, நெஸ்லே பியூர் லைஃப், சேன் பெல்லெக்ரினோ ஆகிய நிறுவனங்களின் தண்ணீர் போத்தல்கள் அவை. 93% போத் தல்களில் பிளாஸ்டிக் நுண்துகள் கள் இருந்தன. இந்தத் துகள் களால் ஏற்படும் உடல்நலக் கோளா றுகள் பற்றி தெளிவாகத் தெரிய வில்லை என நிபுணர்கள் தெரிவித் தனர். பெரும்பாலும் குழாயிலிருந்து வரும் தண்ணீர் நல்லது என திரு மேசன் கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!