வேலையின்மை, ஆட்குறைப்பு விகிதம் அதிகரிப்பு

இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் வேலைச் சந்தை சற்று மந்தமாகியுள்ளது என்று மனிதவள அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரி வித்தது. இதில் சென்ற ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து காணப்பட்ட நிலையான முன்னேற்றம் தற் போது மெதுவடைந்துள்ளதை அறிக்கையின் தொடக்கக் கட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. பொருளாதாரம் மீண்டு வரும் வேளையில் பலர் வேலை தேடு வதினால் மொத்த வேலை வாய்ப்பு கள் அதிகரித்திருந்தாலும் வேலையின்மை விகிதமும் சற்று கூடியிருந்தது.

ஆட்குறைப்பினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் மூப்படையும் ஊழியர்கள், நிபுணர்கள், நிர் வாகிகள், மேலாளர்கள், தொழில் நுட்பர்கள் ஆவர். சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையில் இருந்த 2 விழுக்காடு வேலை யின்மை விகிதம் இவ்வாண்டு அதே காலகட்டத்தில் 2.1 விழுக் காடாக அதிகரித்துள்ளது. அதேபோல் சிங்கப்பூரர்களின் வேலையின்மை விகிதமும் 3 விழுக்காட்டிலிருந்து 3.1 விழுக் காடானது. இந்த மூன்று மாதக் காலத்தை சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகை யில் கூடுதலானோர் தங்கள் வேலைகளையும் இழந்ததாக அறியப்படுகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon