கைபேசியில் அரட்டையடித்த மனைவியை அறுத்த கணவன்

சேலம்: பலமுறை கண்டித்தும், கூட்டாளிகளுடன் தொடர்ந்து கைபேசியில் பேசிக்கொண்டி ருந்த மனைவியின் காதை அறுத்த கணவர் கைதானார். இச்சம்பவம் சேலத்தில் நிகழ்ந் துள்ளது. எடப்பாடியைச் சேர்ந்த 40 வயதான முத்துராஜா தொழிற் சாலை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சந்தியா (40 வயது) தனியார் பள்ளியில் உதவித் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இத்தம்பதியருக்கு 8 வயதில் மகன் உள்ளார். சந்தியாவின் நட்பு வட்டாரம் சற்று பெரியது எனக் கூறப்படுகிறது. அவர் பணி முடிந்து வீடு திரும்பிய பின்னர், தன் நட்பு வட்டத்தில் உள்ள வர்களுடன் வெகுநேரம் கைபேசியில் பேசி வந்துள்ளார். அதனால் அதிருப்தி அடைந்த கணவர் முத்துராஜா, கைபேசியில் பேசுவதைக் குறைத்துக்கொள்ளுமாறு அறி வுறுத்தி உள்ளார். எனினும் தன் போக்கை மாற்றிக்கொள் ளாத சந்தியா, தினமும் பல மணி நேரத்தை கைபேசியில் செலவழித்ததால் முத்துராஜா வுக்கு கோபம் அதிகமானது.

இந்நிலையில் நேற்று முன்தினம் பணி முடிந்து வீடு திரும்பிய சந்தியா, வழக்கம் போல் பலரை கைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதனால் கோபத்தின் உச் சிக்குச் சென்ற கணவர் முத்து ராஜா, “யாரும் தொடர்பு கொள்ளாவிட்டாலும் நாமே ஏன் அழைத்துப் பேச வேண்டும்?,” என மனைவியிடம் கேள்வி எழுப்பியதாகத் தெரிகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon