சோமாலியா தலைநகர் குண்டுவெடிப்பில் மூன்று பேர் பலி, 14 பேர் காயம்

சோமாலிய தலைநகரில் தற்கொலையாளி ஒருவன் தன்னைத் தானே வெடித்துக்கொண்டு தாக்குதல் நடத்திய சம்பவத்தில் மூன்று வீரர்கள் கொல்லப்பட்டனர். பதினான்கு பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களில் ஆறு குழந்தைகளும் அடங்குவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தத் தாக்குதலால் அருகில் இருந்த வீடுகளும் சேதமடைந்தன. பள்ளிவாசல் ஒன்றின் கூரையும் உடைந்து சிதறியது. அல்- ஷாபாப் எனும் போராளி அமைப்பு தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது. அரசாங்க அலுவலகத்தில் நுழைய முயற்சி செய்த வெடிகுண்டு நிரப்பிய காரை தடுத்து நிறுத்தியபோது மூன்று வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று உள்ளூர் அதிகாரியான சாலே ஹசான் உமர் தெரிவித்தார். படம்: ஈபிஏ

இப்பகுதியில் மேலும் செய்திகள்

அமெரிக்காவில் இருந்து சீனாவுக்குச் செல்லும் ‘பெய் பெய்’, கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி தனது நான்காவது பிறந்தநாளைக் கொண்டாடியது. படம்: இணையம்

19 Nov 2019

அமெரிக்காவிலிருந்து சீனா செல்லும் பாண்டா

பல்கலைக்கழக வளாகத்தைவிட்டு வெளியேற முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவரை போலிசார் மடக்கிப் பிடித்ததில் அவர் காயம் அடைந்தார். ரத்தம் வடியும் முகத்துடன் இருந்த அவரைக் கைது செய்து கொண்டு செல்லும் அதிகாரிகள். படம்: ராய்ட்டர்ஸ்

19 Nov 2019

ஹாங்காங்கில் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் காயம்