புகைப்படக் கலைஞர் வேடத்தில் சேதுபதி

முதன்முறையாக விஜய் சேதுபதி யுடன் இணைந்துள்ளார் திரிஷா. இருவரும் ஜோடியாக நடிக்கும் '96' படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. மெட்ராஸ் என்டர்பிரைசஸ் சார்பில் நந்தகோபல் தயாரித்துள்ள இப்படத்தில் ஜனகராஜ், தேவ தர்‌ஷினி 'ஆடுகளம்' முருகதாஸ், கவிதாலயா கிருஷ்ணன், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பிரேம்குமார் இயக்கி உள்ளார். இவர் 'பசங்க', 'சுந்தரபாண்டி யன்', 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' உள்ளிட்ட படங் களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். தற்போது இயக்குநராக அறிமுக மாகிறார். விஜய் சேதுபதி முதன்முறை யாக புகைப்படக் கலைஞராக நடித்துள்ளாராம். படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது இப்படம். "முற்றிலும் மாறுபட்ட ஒரு காதல் கதையை உருவாக்கி உள்ளோம். விஜய் சேதுபதி நடித்துள்ள மற்ற படங்களை விட இது அவரது ரசிரகர்களுக்கு மிகவும் பிடித்தமான படமாக இருக்கும். அவரது நடிப்பைக் கூடுதலாக ரசிப்பர். "படத்தின் பாடல்களும் முன் னோட்டமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இதுவே எங்களுக்குக் கிடைத்த வெற்றிதான்," என்கிறார் இயக்கு நர் பிரேம்குமார்.

'96' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில் விஜய் சேதுபதி, திரிஷா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!