‘பாஜக குரல் மட்டுமே ஒலிக்க வேண்டும் என்கிறார்கள்’

சென்னை: ஆராய்ச்சி மாணவி சோபியா கைது செய்யப்பட்டதற்குப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நாட்டில் ஒரே ஒரு குரல்தான் ஒலிக்க வேண்டுமா? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. பாஜக மாநிலத் தலைவி தமிழிசை சென்ற விமானத்தில் பயணம் மேற்கொண்ட சோபியா, பாஜகவுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினார். இது தொடர்பாக தமிழிசை அளித்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இந்தக் கைது நடவடிக்கையை அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கண்டித்துள்ளனர்.

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் குரல் மட்டுமே ஒலிக்கவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்படு வதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரி தெரிவித்துள்ளார். “அவர்களைத் தவிர்த்து வேறு யாராவது பேசினால் சிறையில் தள்ளப்படுகிறார்கள். இதற்காகத் தான் ஆயிரக்கணக்கானோர் தங் களின் வாழ்க்கையைத் தியாகம் செய்தனரா? இதைத்தான் இந் தியா விரும்புகிறதா?” என்று மணிஷ் திவாரி கேள்வி எழுப்பி உள்ளார்.

நீதிமன்றத்தில் இருந்து வெளியேறும் சோபியா. படம்: தமிழகத் தகவல் ஊடகம்.