பிரதமர் லீ: மூத்தோருக்கு மேலும் அதிகமான உடற்பயிற்சிக்கூடங்கள்

முதிர்ச்சியடைந்த வீடமைப்புப் பேட் டைகளில் மூத்தோருக்கும் உடற் குறை உள்ளோருக்கும் அதிகமான கட்டுடல் பயிற்சிக் கூடங்கள் கட்டப்படும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து உள்ளார். அந்த வகையில் முதல் உடற் பயிற்சிக்கூடம் அடுத்த ஆண்டு மத்தியில் அங் மோ கியோ சமூக மன்றத்தில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

அங் மோ கியோ சமூக மன்றத் தில் துடிப்புமிக்க மூதோர்களுக் கான இரவு உணவு விருந்தில் பங்கேற்றுப் பிரதமர் பேசினார். சிங்கப்பூரில் பெரும்பாலும் இதர நகரங்களைக் காட்டிலும் அங் மோ கியோ குடியிருப்புப் பேட்டையில் அதிகமான மூத்தோர் இருப்பதாகக் கூறினார் அங் மோ கியோ குழுத் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினருமான திரு லீ. எனவே, ஏரோபிக்ஸ், தைஜி, நடனம் போன்ற நடவடிக்கைகளில் பங்ககெடுப்பதன் மூலம் துடிப்புடன் மூப்படைதலை அங் மோ கியோ சமூக மன்றம் ஊக்குவிப்பதாக அவர் குறிப்பிட்டார். ஓய்வு பெற்ற பின்னர் மனதளவிலும் உடலள விலும் சுகாதாரத்தைப் பராமரிக்க இந்நடவடிக்கைகள் துணைபுரியும் என்றார் அவர்.

இதற்கிடையே, மூத்தோர் சூழ லில் அமையும் கட்டுடல் பயிற்சிக் கூடங்கள் அமைந்த சமூக மன்றங் களின் எண்ணிக்கையை அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஐந்தாக உயரும் என்று ‘ஸ்போர்ட் சிங் கப்பூர்’ எதிர்பார்க்கிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இரவு உணவுக்காக அறையில் இருந்த குடும்பத்திற்கு அழைப்பு விடுக்கக் கதவைத் தட்டிய நண்பர், மூவரும் நினைவிழந்த நிலையில் கிடப்பதைக் கண்டார். படங்கள்: ஷின் மின் நாளிதழ், பேங்காக் போஸ்ட்

13 Dec 2019

தாய்லாந்து விடுதியில் எரிவாயு கசிவு: நினைவிழந்த நிலையில் கிடந்த சிங்கப்பூர் குடும்பம்

(இடமிருந்து) வழக்கறிஞர் ரவி, திரு டேனியல் டி கோஸ்டா, திரு டெர்ரி சூ. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

13 Dec 2019

இருவரின் சார்பில் குற்றவியல் அவதூறு வழக்கில் வாதிட எம். ரவி விண்ணப்பம்

இவ்வாண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை உயரத்திலிருந்து விழும் சன்னல் தொடர்பான 48 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

13 Dec 2019

பராமரிப்புக் குறைபாடே சன்னல் சம்பவங்களுக்கு காரணம்