ஃபாண்டி புலம்பல்: கவனக்குறைவால் விட்ட கோல்

பக்கலோட்: சுசுகி கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் விளை யாடுவது என்பது சிங்கப்பூரின் தேசிய விளையாட்டரங்கம், பேங் காக்கில் உள்ள ராஜமங்கள விளையாட்டரங்கிலும் விளையாடு வது போன்றதைத் தாண்டி பிலிப்பீன்சிலுள்ள கரடுமுரடான மைதானத்தில் விளையாடு வதையும் உள்ளடக்கிய ஒன்று. இப்படிப்பட்ட பிலிப்பீன்சை எதிர்த்து அந்நாட்டின் பக்கலோட் மைதானத்தில் நேற்று முன்தினம் விளையாடிய சிங்கப்பூர் காற்பந்து அணியால் சோபிக்க முடியாமல் அது 1-0 என்ற கோல் எண்ணிக்கையில் தோல்வியைத் தழுவியது.

நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு தரப்பினரும் மிகவும் மூர்க்கத் தனமாக விளையாடினர். இப்படிப்பட்ட போட்டியில்தான், ஆட்டத்தின் 78ஆம் நிமிடத்தில் மைதானத்தின் விளிம்பிலிருந்து பிலிப்பீன்ஸ் அணி வீரர் வீசிய பந்து பல சிங்கப்பூர் வீரர்களைத் தாண்டி பிலிப்பீன்ஸ் அணியின் ஜெர்மானிய வீரரான பேட்ரிக் ரெய்கால்ட் என்பவரிடம் வந்து விழ அவரும் லாவகமாக சிங்கப் பூர் கோல்காப்பாளர் ஹசான் சனியின் கைகளில் பந்து பிடிபடாத வண்ணம் கோல் வலைக்குள் அடித்தார். "ஆட்டம் சமநிலை அடைந் திருந்தால் அது திருப்தியளிக்கும் முடிவாக இருந்திருக்கும்.

ஆட்டத்தில் ஒரு புள்ளிகூட பெறமுடியாமல் போனது ஏமாற்றம் அளிக்கவே செய்கிறது," என்று அலுத்துக்கொண்ட லயன்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளர் ஃபாண்டி அகமது, "அது கவனக் குறைவால் விழுந்த கோல். வீசி எறியப்பட்ட பந்தின் மூலம் இந்த கோல் புக வழிவிட்டுள்ளோம். இதை வைத்து நாங்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்," என்றார். சிங்கப்பூர் நேரப்படி நேற்று முன்தினம் இரவு 8.00 மணிக்குத் தொடங்கிய இந்த ஆட்டத்தில் முந்தைய ஆட்டத்தில் இந்தோனீ சியாவை 1=0 என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றி பெற உதவியாக இருந்த அதே அணியைக் கொண்ட வீரர்களை ஃபாண்டி களமிறக்கினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!