மறைந்த எழுத்தாளர்களை நினைவுகூரும் நிகழ்ச்சி

மறைந்த எழுத்தாளர்களை நினைவு கூரும்விதமாக தேசிய நூலக வாரியத்தின் தமிழ்மொழிச் சேவை கள் பிரிவு கடந்த ஆண்டு முதல் ‘நினைவின் தடங்கள்’ எனும் அஞ்சலி நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. அந்த வகையில், இவ்வாண்டு ச.ஞாநி, பாலகுமாரன், ம.இலெ. தங்கப்பா, துரைராஜ் (மலேசியா), ஆதி இராஜகுமாரன் (மலேசியா), கூத்துப் பட்டறை ந.முத்துசாமி, கலைஞர் மு.கருணாநிதி ஆகிய எழுவர் நினைவுகூரப்பட உள்ளனர். இந்த நினைவஞ்சலி நிகழ்ச்சி டிசம்பர் மாதம் முதல் தேதியன்று மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை தேசிய நூலக வாரி யத்தின் ‘The POD’ல் நடை பெறும். மேற்கண்ட எழுவரும் எழுத்துத் துறைக்கு ஆற்றிய பங்களிப்பைப் பற்றி சிறப்புரையாளர்கள் உரை நிகழ்த்துவர்.