மாணவர்கள் உலகத்திறன் அனுபவம் பெற புதிய திட்டம்

மாணவர்களுக்கு மேம்பட்ட உல கத்திறன் அனுபவம் வழங்கும் நோக்கத்துடன் தேசிய உலகத் திறன் வல்லமை திட்டம் அமைக்கப் படுமென துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் நேற்று அறிவித்தார். தொழில்நுட்பக் கல்விக்கழக மத்திய கல்லூரியில் சிங்கப்பூர் தேசிய உலகத்திறன் போட்டியைத் தொடங்கி வைத்துப் பேசிய திரு டியோ, பல்வேறு தொழில்துறை களில் வல்லமை பெற்றவர்கள், உலகத்திறன் போட்டியளர்களுக்கு வழிகாட்டிகளாகவும் முன்மாதிரிக ளாகவும் துணை புரிவார்கள் என்று கூறினார்.

பல்வேறு திறன்களையும், திறன் தேவைப்படும் வாழ்க்கைத் தொழில்களையும் பற்றிய பொது விழிப்புணர்வை வளர்க்கும் நோக் கத்துடன் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நான்கு திறன் மையங்களும் அமைக்கப்படும். இந்நான்கு மையங்களிலும் வெவ்வேறு துறை களிள் இடம்பெறும்: பொறியியலும் மின்னணுவியலும், சுகாதாரமும் நடைமுறை அறிவியலும், தகவல் தொழில்நுட்பமும் தகவல் தொடர் பும், சேவைகள் ஆகியவை அவை. சிங்கப்பூரர்கள் திறன்களை வளர்த்துக்கொள்ள உதவி புரிவது நாட்டின் பொருளியல், சமூக உத்தியின் முக்கிய முனைப்பாகத் தொடர்ந்து விளங்கும் என்று திரு டியோ தமது உரையில் குறிப்பிட் டார்.

உற்சாகமூட்டும் குழுவினர் பணியை இனி மனித இயந்திரங்களே ஆற்றக்கூடும் என்று சொல்லும் அளவுக்கு நேற்றைய நிகழ்ச்சியில் அவை அறிமுகப்படுத்தப்பட்டன. படம்: ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!