கைத்தொழில் கற்றுக்கொண்ட 10,000 பணிப்பெண்கள்

முஜாஹிதா கற்றல் நிலையத்தில் ஆங்கில மொழியையும் தையல், சமையல், சிகை அலங்காரம் போன்ற கைத்தொழில்களையும் 10,000க்கும் அதிக வெளிநாட்டுப் பணிப்பெண்கள் கற்றுக்கொண் டிருக்கிறார்கள். முஜாஹிதீன் பள்ளிவாசலின் முயற்சியாக இந்த கற்றல் நிலையம் 2005ல் ஏற்படுத்தப் பட்டது. இந்தோனீசியா, நேப்பாளம், இலங்கை போன்ற நாடுகளைச் சேர்ந்த பணிப்பெண் களுக்கு இந்தக் கற்றல் நிலையம் பயிற்சியளிக்கிறது. கடந்த 2005ல் வெறும் 35 பேருடன் தொடங்கிய இந்த நிலையம் இன்றைய தேதியில் 10,000க்கும் அதிக பணிப்பெண் களுக்கு பயிற்சி அளித்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்த நிலையம் அடைந்திருக்கும் முன்னேற்றத்தை எடுத்துக் காட்டும் வகையில் நேற்று இந்த நிலையம் நினைவுப் புத்தகம் ஒன்றை வெளியிட்டது.

அந்த நிகழ்ச்சியில் மாணவர் கள் தாங்கள் கற்றுக்கொண்ட தேர்ச்சிகளுக்கான பட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். இந்தக் கற்றல் நிலையத்தில் கைத் தொழில்களைக் கற்றுக் கொண்ட வெளிநாட்டுப் பணிப் பெண்களில் சிலர் பாலி, பாத்தாம் போன்ற இடங்களில் சொந்தமாக சிகை அலங்கார நிலையங் களையும் சிகிச்சை நிலையங் களையும் அமைத்திருக்கிறார்கள் என்று இந்தக் கற்றல் நிலையத் தின் ஆலோசகரான திருவாட்டி சரிமா திலிப் கூறினார். இந்த நிலையத்தில் தையல் தொழிலை கற்றுக்கொண்ட இந்தோனீசியாவைச் சேர்ந்த 34 வயதுள்ள ஐ‌ஷி என்ற ஒரு மாது தான் இதுவரையில் எட்டு உடுப்புகளைத் தைத்திருப்ப தாகத் தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை தோறும் இரண்டு மணி நேரம் தையல் வகுப்புகளில் கலந்துகொண்ட தாகவும் இதற்கு ஆன செலவை தன் முதலாளி செலுத்தியதாகவும் அவர் கூறினார். "எனக்கு சிறு வயது முதலே தையல் கற்றுக் கொள்ள ஆசை. பணம் இல்லா ததால் இதுவரை நிறைவேறாமல் இருந்த ஆசை இப்பொழுது நிறைவேறிவிட்டது," என்று அவர் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!