41 பேருக்கு ஸிக்கா பாதிப்பு

அல்ஜுனிட் கிரசென்ட், சிம்ஸ் டிரைவ் பகுதிகளைச் சேர்ந்த 41 பேர் 'ஸிக்கா' கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர் என்றும் அவர் களில் 34 பேர் முழுமையாக குணமடைந்துவிட்டனர் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்து இருக்கிறது. பாதிக்கப்பட்ட 41 பேரில் 36 பேர் வெளிநாட்டுக் கட்டுமானத் தொழிலாளர்கள். இந்த 'ஸிக்கா' தொற்றுப் பரவல் உள்ளூரிலேயே நிகழ்ந்தது என்றும் பாதிக்கப்பட்ட அனைவரும் 'ஸிக்கா' தொற்று பாதிப்பு இருக்கும் எந்த நாட்டிற் கும் செல்லவில்லை என்றும் தெரி விக்கப்பட்டது.

சுகாதார அமைச்சும் தேசிய சுற்றுப்புற வாரியமும் கூட்டாக இணைந்து நேற்று செய்தியாளர் களைச் சந்தித்தபோது இந்த விவரங்களை வெளியிட்டன. அதன்பிறகு, செய்தியாளர்களி டம் பேசிய சுகாதார அமைச்சர் கான் கிம் யோங், வரும் நாட்களில் உள்ளூரிலேயே பரவக்கூடிய 'ஸிக்கா' தொற்று பாதிப்பு அதி கரிக்கலாம் என்று எதிர்பார்ப்ப தாகத் தெரிவித்தார். அதேபோல, "சிங்கப்பூரைப் பொறுத்தவரை அனைத்துலகப் பயணங்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்பதால், வெளி நாட்டில் இருந்தும் ஸிக்கா தொற்று சிங்கப்பூருக்குள் நுழை வதைப் பெரும்பாலும் தவிர்க்க முடியாது," என்றும் அவர் சொன்னார்.

கட்டுமானத் தொழிலாளர்கள் 118 பேர் உட்பட 124 பேருக்கு ஸிக்கா தொற்று இருக்கிறதா என்று நேற்று முன்தினம் பரி சோதனைகள் மேற்கொள்ளப்பட் டன. அவர்களில் 78 பேருக்கு அந்த பாதிப்பில்லை என்பதை சோதனைகள் உறுதிப்படுத்தின. மீதமுள்ள ஐவர் குறித்த முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அல்ஜுனிட் கிரசென்ட்டில் வசித்து வரும் 47 வயது மலே சிய மாது ஒருவர் சிங்கப்பூரில் உள்ளூரிலேயே பரவியதாகக் கருதப்படும் 'ஸிக்கா' தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபராக நேற்று முன்தினம் அறிவிக்கப் பட்டார். சிங்கப்பூரில் ஸிக்கா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரே பெண்ணும் இவர்தான் என்று கூறப்பட்டது.

மெக்பர்சன் தனித் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டின் பெய் லிங்கும் (நடுவில்) அடித்தளத் தலைவர்களும் நேற்று அல்ஜுனிட் கிரசென்ட் குடியிருப்பாளர்களைச் சந்தித்து ஸிக்கா கிருமித்தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!