மின்தூக்கி நவீனமயம்

சிங்கப்பூரின் வீவக குடியிருப்புப் பேட்டைகளில் உள்ள மின்தூக்கிகளை நவீனப்படுத்துவதில் நகர மன்றங்களுக்கு உதவும் புதிய திட்டம் ஒன்று நேற்று அறிவிக்கப்பட்டது. தற்போதைய மின்தூக்கிகளின் நம்பகத்தன்மையையும் ஆற்றலை யும் மேம்படுத்தும் விதமாக நவீன மயத்திற்கான எட்டு அம்சங்களை கட்டட, கட்டுமான ஆணையம் கடந்த வெள்ளிக்கிழமையன்று பரிந்துரைத்து இருந்தது. புதிய மின்தூக்கி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், பாதுகாப்பை வலியுறுத்தும் அந்த அம்சங்களைப் பொருத்தி மின்தூக்கிகளை நவீனப்படுத்த நகரமன்றங்களுக்கு ஆகும் செலவில் கிட்டத் தட்ட 90 விழுக்காட்டை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் வழங்கி உத வும். பரிந்துரைக்கப்பட்ட அம்சங்களைக் கொண்டிராத, 18 ஆண்டு களுக்கும் குறைவாக இயக் கத்தில் இருக்கும் மின் தூக்கிகள் நவீனமயத்திற்குத் தகுதிபெறும். அவ்வாறு பார்க்கையில், தற் போது இயங்கிவரும் கிட்டத்தட்ட 20,000 மின்தூக்கிகள் இத்திட்டத் திற்குத் தகுதிபெறும். நவீன அம்சங்களுடன் அவற்றை மாற்ற சுமார் $450 மில்லியன் செலவா கும். இதுதொடர்பான மேலும் பல நடைமுறை விவரங்கள் வரும் மாதங்களில் நகர மன்றங்களுக்கு அளிக்கப்பட உள்ளன.

கிட்டத்தட்ட பத்து ஆண்டு களுக்கு இந்த நவீனமயத் திட்டம் நடப்பில் இருக்கும் என்றும் நகர மன்றங்களின் மின்தூக்கிப் பராமரிப்பு, மின்தூக்கி பாகங்கள் மாற்றுதல் திட்டத்தின் ஒருபகுதி தான் இது என்றும் வீவக தெரி வித்துள்ளது. இதுபோன்ற நவீன மேம்பாடு களுக்கு ஆகும் செலவு நகர மன்றங்களுக்கு ஒரு நிதிச் சவாலாகக் கருதப்படக்கூடும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார். அதனைச் சமாளிப்பதற்கு புதிய திட்டம் நிதி ஆதரவு வழங் கும் என்றார் அவர். “பெரிய அளவிலான இத்திட் டம் அரசாங்கத்தின் குறிப்பிடத் தக்கச் செலவுகளை உள்ளடக்கி இருக்கும்,” என்று திரு வோங் தமது நேற்றைய வலைப்பூ பதி வில் குறிப்பிட்டுள்ளார்.

Loading...
Load next