சாலை விழுங்கிப் பள்ளம்

ஜப்பானின் கியு‌ஷு தீவில் உள்ள ஃபுகுவோகா நகரப் பிரதான சாலை ஒன்றில் நேற்றுக் காலை திடீரென பெரும் பள்ளம் உருவானதால் அவ்வழியே போக்குவரத்து முற்றாக முடங்கியது. சுமார் 800 வீடுகளுக்கு மின்விநியோகம் தடைபட்டது. பரபரப்பான ஹக்காட்டா ரயில் நிலையம் அருகே அதிகாலை 5.15 மணியளவில் சாலை புதையத் தொடங்கியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. இச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. நிலத்தடி ரயில் சேவை விரிவாக்கத்திற்காக அப்பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. நேரம் செல்லச் செல்ல பள்ளம் பெரிதாகிக்கொண்டே இருந்ததாகவும் காலை 9 மணியளவில் எல்லாத் திசைகளிலும் 20 மீ. அளவிற்குப் பள்ளம் விரிவடைந்ததாகவும் கூறப்பட்டது. படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!