ஆர்ச்சர்ட் ரோட்டில் அறப்பணி ஒளியூட்டு; தேவதைகள் வலம்

அதிபர் டோனி டான் கெங் யாம், சனிக்கிழமை இரவு சமூக உண்டியல் கிறிஸ்மஸ் அலங்கார ஒளியூட்டை தொடங்கி வைத்தார். ஒளியூட்டுக்குப் பொறுப்பாதரவு வழங்கும் ஹிட்டாச்சி ஆசியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இசிரோ லினோ, சிங்கப்பூருக்கான ஜப்பானிய தூதர் கெஞ்சி ‌ஷினோடா ஆகியோரும் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

ஆர்ச்சர்ட் ரோடு கிறிஸ்மஸ் அலங்கார ஒளியூட்டுக்குச் சமூக உண்டியல் அமைப்பு இத்துடன் 33 ஆண்டு காலமாக ஏற்பாடு செய்து வந்துள்ளது. அந்த ஒளியூட்டு ஜனவரி 2 வரை தொடரும். பல்வேறு நிகழ்ச்சிகளின் வழியாக சமூக உண்டியலுக்கு நன்கொடை திரட்டப்படும். சிங்கப்பூருக்கும் ஜப்பானுக்கும் இடையில் அரசதந்திர உறவுகள் ஏற்பட்டு 50 ஆண்டுகள் ஆவதைக் கொண்டாடு வதாகவும் அந்த ஒளியூட்டு திகழ்கிறது.

ஒளி வெள்ளத்தில் மிதக்கும் ஆர்ச்சர்ட் ரோட்டில் வலம் வரும் தேவதை. சமூக உண்டியல் கிறிஸ்மஸ் அலங்கார ஒளியூட்டை அதிபர் டோனி டான் சனிக்கிழமை தொடங்கி வைத்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மனைவியுடன் ரவிச்சந்திரன் (படங்கள்: முருகேசன்/இட்ஸ்‌ரெயினிங்ரெயின்கோட்ஸ்)

19 Nov 2019

வாழத் தொடங்கியதும் வந்து முடித்தது மரணம்

கப்பலில் இருந்த மருத்துவ உதவிக்குழு இதய சுவாசமூட்டல் உட்பட பல்வேறு சிகிச்சைகள் அளித்தபோதும் சிறுவனை உயிர்ப்பிக்க முடியவில்லை என்று பேச்சாளர் குறிப்பிட்டார். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Nov 2019

சிங்கப்பூரிலிருந்து கிளம்பிய சொகுசுக் கப்பலின் நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் மரணம்