பேருந்துப் பயணிகளுக்கு சமநேர பயணத் தகவல்கள்

பேருந்துகளில் புதிய பயணத் தகவல் பலகைகள் நேற்று முதல் பொருத்தப்பட்டுள்ளன. அவை பய ணிகள் தெரிந்துகொள்ளக்கூடிய பயணத் தகவல்களைக் காட்டும். பேருந்து எந்த நிறுத்தத்தில் நிற்கிறது, அடுத்த நிறுத்தங்கள் என்ன, எந்த நிறுத்தத்தில் பயணம் நிறைவுபெறும் என்பன போன்ற தகவல்கள் அந்தத் தகவல் பலகையில் காட்டப்படும். பயணிகளுக்குத் தகவல் காட் டும் முறை என்று அழைக்கப்படும் இத் திட்டம் இரண்டு மாதத்துக்கு சோதித்துப் பார்க்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது. இந்தச் சிறப்பு அம்சம் MAN A22 ரக பேருந்தில் பொருத்தப் பட்டுள்ளது. சேவை எண் 106 பாதையை டவர் டிரான்சிட் நிறு வனம் நடத்துகிறது. புக்கிட் பாத் தோக்கில் தொடங்கும் இப்பேருந்து சேவை ஷெண்டன் வேயில் முடிவ டைகிறது. தற்போது, சில பேருந்துகளில் உள்ள 'எல்இடி' அறிவிப்புப் பல கைகள் அடுத்த பேருந்து நிறுத்தம் என்ன, பேருந்து நிற்கப்போகிறது போன்ற தகவல்களை மட்டும் காட்டுகிறது.

பயணிகள் தெரிந்துகொள்ளக்கூடிய சமநேர பயணத் தகவல்கள் நேற்று முதல் சில பேருந்துகளில் உள்ள தகவல் பலகைகளில் காட்டப்படுகின்றன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!