கடற்பகுதியைப் பாதுகாக்க பன்முனை ஒத்துழைப்பு தேவை

சிங்கப்பூர் கடற்படையின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு உலகெங் கிலுமிருந்து பல்வேறு கடற்படைகள் ஒன்றுகூடிய கொண்டாட்டம், சிங்கப்பூரின் வலுவான உலகளா விய நட்புறவுக்கும் கட்டமைப்புக ளுக்கும் சான்று என அதிபர் டோனி டான் கெங் யாம் நேற்று கூறினார். சிங்கப்பூர் கடற்படை ஒருமித்த நோக்கமுடைய கடற்படைகளுடன் நீடித்த பங்காளித்துவத்தை வளர்த் துக் கொண்டிருப்பதைச் சுட்டிக் காட்டிய டாக்டர் டான், "நிலையான கடல்துறையையும் பாதுகாப்பான கடற்பகுதியையும் உறுதிப்படுத்த, பன்முனை ஒத்துழைப்பு முக்கியம்" என்று கூறினார்.

இன்று எதிர்நோக்கப்படும் பாதுகாப்பு மிரட்டல்களில் பெரும்பா லானவை பன்னாட்டு இயல்புடை யவை என்பதால், எந்த ஒரு நாடும் தனியாகச் சமாளிக்க முடியாது என்பது இதற்குக் காரணம் என் றார் அவர். சாங்கி கடற்படைத் தளத்தில் அனைத்துலகக் கடலோ டிகள் அணியினரின் வரவேற்புக் குப் பிறகு டாக்டர் டான் பேசினார். "இன்றைய சவால்மிக்க, நிச்ச யமற்ற பாதுகாப்புச் சூழலில், நல்ல வன்பொருளும் வலுவான ஆற்ற லும் கொண்டிருப்பது மட்டுமே போதாது," என்றார் முன்னாள் துணைப் பிரதமரும் தற்காப்பு அமைச்சருமான டாக்டர் டான்.

சாங்கி கடற்படைத் தளத்தில் நடைபெறும் சிங்கப்பூர் அனைத்துலக கடல்துறைக் கண்காட்சியை நேற்று அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்த அதிபர் டோனி டான் கெங் யாம், ஜீப் வாகனத்தில் பவனிவந்து அணிவகுத்து நின்ற அனைத்துலகக் கடற்படையினரைப் பார்வையிட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!