ஆண்டின் சிறந்த சிங்கப்பூரராக சிட்டி நூர் மஸ்துரா தேர்வு

சமய நல்லிணக்கத்திற்காகவும் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள் ளோருக்காகவும் பாடுபட்டு வரும் 28 வயதான சிட்டி நூர் மஸ்துரா ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் 2018ஆம் ஆண்டிற்கான சிறந்த சிங்கப்பூரர் விருதைத் தட்டிச் சென்றார்.
‘இன்டர்ஃபெய்த் யூத் சர்க்கிள்’, ‘பேக்2பேசிக்ஸ்’ ஆகிய லாப நோக்கமற்ற நிறுவனங்களை நடத்தி வரும் குமாரி மஸ்துரா, இஸ்தானாவில் நேற்று நடந்த விருது நிகழ்ச்சியில் அதிபர் ஹலிமா யாக்கோப்பிடம் இருந்து இந்த உயரிய விருதைப் பெற்றுக் கொண்டார்.
அவருக்கு வெற்றியாளர் கிண் ணத்துடன் $20,000 ரொக்கப் பரிசும் கிடைத்தது. விருதின் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு பெற்ற இதர பத்துப் பேருக்கு ஆளுக்கு $5,000 வழங்கப்பட்டது.
“நம் இளையர்களுக்கு அவர் களின் சமய நம்பிக்கைகள் பற்றி நேர்மையாகக் கலந்துரையாடு வதற்குப் பாதுகாப்பான வெளி களை உருவாக்க விரும்பினேன்,” என்றார் குமாரி மஸ்துரா.
ரமலான் மாதத்தில் யூத இனத் தவர்கள் சிங்கப்பூர் முஸ்லிம்கள் உடன் இணைந்து நோன்பு திறப் பது உள்ளிட்ட பல புதுமையான சமய நல்லிணக்க நிகழ்ச்சிகளை இவர் ஏற்பாடு செய்து நடத்திக் காட்டியுள்ளார்.
2015ஆம் ஆண்டில் இவரும் இவரின் பள்ளி வகுப்புத்தோழி ஒருவரும் இணைந்து ‘இன்டர் ஃபெய்த் யூத் சர்க்கிள்’ அமைப்பைத் தொடங்கினர். பல்வேறு சமயங் களைச் சேர்ந்தவர்கள் பங்கு கொண்டு, வெவ்வேறு சமய நூல் களில் இடம்பெற்றுள்ள ஒரே கருப்பொருள் தொடர்பிலான நம்பிக்கைகள் குறித்த கலந்துரை யாடல் நிகழ்ச்சியை மாதந்தோறும் இந்த அமைப்பு நடத்தி வருகிறது.
வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியாத முதியவர்களுக்கும் ஒற்றைத் தாய்மார்களுக்கும் அவர் களின் வீட்டிற்கே நேரில் சென்று ஹலால் மளிகைப் பொருட்களை இலவசமாக வழங்கி வருகிறது ‘பேக்2பேசிக்ஸ்’ அமைப்பு.
இந்த ஆண்டு தனிநபர்கள், அமைப்புகள் என மொத்தம் 74 பேர் விருதுக்கு முன்மொழியப்பட் டனர். அவர்களிலிருந்து 11 பேர், 14 நடுவர்கள் அடங்கிய குழுவால் மூன்று கட்டத் தேர்வுக்குப் பிறகு இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
“விருதுக்குத் தகுதியான பலர் முன்மொழியப்பட்டு இருந்தனர். இறுதிச் சுற்றுக்குத் தேர்வான 11 பேரும் சிங்கப்பூரர்களாக நம்மைப் பெருமைகொள்ளச் செய்தனர்,” என்றார் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் முதன்மை ஆசிரியர் திரு வாரன் ஃபெர்னாண்டஸ்.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் 2018ஆம் ஆண்டிற்கான சிறந்த சிங்கப்பூரர் விருதை அதிபர் ஹலிமா யாக்கோப்பிடம் (வலமிருந்து 2வது) இருந்து பெற்றுக்கொள்கிறார் சிட்டி நூர் மஸ்துரா, 28. (உடன்) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் ஆங்கில, மலாய், தமிழ் ஊடகப் பிரிவின் முதன்மை ஆசிரியர் வாரன் ஃபெர்னாண்டஸ் (இடது), யுபிஎஸ் குழுமத்தின் ஆசிய பசிபிக் வட்டாரத்திற்கான தலைவர் எட்மண்ட் கோ (வலது). படம்: திமத்தி டேவிட்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஜுவல் சாங்கியில் உள்ள 'நைக்கி' கடையில் விற்கப்படும் டி-சட்டைகளில் தமிழ். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 Apr 2019

'சும்மா செஞ்சு முடி' - 'நைக்கி' தமிழ்