பொங்கோலில் புதிய தலைமுறை அக்கம்பக்க மையம்

பொங்கோலில் முதல் புதிய தலைமுறை அக்கம்பக்க மையம் திறக்கப்பட்டுள்ளது.
அதற்கு ஒயேசிஸ் டெரசஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. பொங்கோல் வட்டாரத்தில் உள்ள வாட்டர்ஃபிரண்ட் பகுதியில்  இருக்கும் அந்த ஏழு மாடி மையம் போக்குவரத்து கட்டமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. 
மையத்தில் 24 மணி நேர உடற்பயிற்சி நிலையமும் இரவு 11 மணி வரை திறந்திருக்கும் பேரங்காடியும் உள்ளன.
புதிய மையத்தை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் கட்டியுள்ளது. மையத்தைக் கட்டுவதற்கு முன்பு 2014ஆம் ஆண்டில் குடி யிருப்பாளர்களுக்கு என்னென்ன வேண்டும் என்று கேட்கப்பட்டது.
குடியிருப்பாளர்கள் முன்வைத்த கருத்துகளைக் கொண்டு புதிய மையம் கட்டப்பட்டுள்ளது.
மையத்தின் அதிகாரபூர்வத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. மையத்தை தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் திறந்துவைத்தார்.
திறப்பு விழாவில் பேசிய திரு வோங், மொத்தம் ஆறு புதிய தலைமுறை அக்கம்பக்க மையங் கள் திறக்கப்பட இருப்பதாகக் கூறினார். 
தனியார் சொத்து மேம்பாட்டா ளர்களைப் போல இல்லாது வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் வர்த்தக லாபத்துக்கு குறிவைக்க வில்லை என்றார் அமைச்சர். 
புதிய தலைமுறை அக்கம்பக்க மையங்கள் போக்குவரத்துக் கட்டமைப்புடன் நன்கு ஒருங் கிணைக்கப்படுவதை கழகத்தால் உறுதி செய்ய முடியும் என்றார் அவர். 

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

9 கூண்டுகளில் அடைக்கப்பட்டு படகு மூலம் கடத்தப்பட்டபோது நாய்க்குட்டிகள் குரைக்கும் சத்தம் காட்டிக்கொடுத்தது. படம்: ஏவிஏ

20 Jun 2019

ஜோகூரிலிருந்து கடல் வழியாக 23 நாய்க் குட்டிகளை கடத்திவர முயன்றவருக்கு சிறை