ஊழியர்களைப் பாதுகாக்கும் சன்மானம்

வேலையிட மரணங்களைக் குறைக்க சாமம், பேதம், தானம், தண்டம் என எல்லா வழிகளிலும் இறங்கி இருக்கிறது அரசாங்கம். கடந்த மாதம் தண்டல்காரன் போல் கடும் விதிகளால் எச்சரித்தது. இப்போது சலுகை களை அறிவித்து ஊக்குவித்துள்ளது. வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார தரக்கட்டுப்பாட்டை மீறும் நிறுவனங்களுக்கு கடுமையான தண்டனைகள் சென்ற மாதம் அறிவிக்கப்பட்டன. குறைந்தபட்ச வேலை நிறுத்த காலத்தை இரண்டில் இருந்து மூன்று வாரங்கள் ஆக்குவது, நிறுவனத்தின் ஊழியர் வேலை அனுமதிச் சீட்டு பெறும் தகுதியை தற்காலிகமாக நிறுத்துவது என கடுமையான விதிமுறைகள் கொண்டுவரப்பட்டன.

தற்போது, கட்டுமானத்துறையில் பாதுகாப்பில் பயிற்சி பெற்ற அனுபவமிக்க வெளிநாட்டு ஊழியர்களுக்கு தீர்வைக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் முதல் வெளிநாட்டு ஊழியர்களைப் பாதுகாப்புப் பயிற்சிக்கு அனுப்பும் நிறுவனங்கள் பயிற்சி பெற்ற ஒவ் வோர் ஊழியருக்கும் $350 தீர்வைக் கட்டணத்தைச் சேமிக்க முடியும். வேலை அனுமதிச் சீட்டுடன் கூடிய அனுபவமிக்க ஊழியர்கள் 'ஆர்1 தேர்ச்சி' பெற்றவர்களாக அங்கீகரிக்கப்படுவர். அவர்களை 22 ஆண்டுகள் வரை பணியில் அமர்த்த முடியும். குறைந்தபட்சம் ஆறு ஆண்டு கள் பணி அனுபவமும் கட்டட, கட்டுமான ஆணை யத்திடமிருந்து சான்றிதழும் பெற்ற ஊழியர்கள், 120 மணி நேரம் பயிற்சி அல்லது சிங்கப்பூர் ஊழியரணித் திறன்கள் தகுதிக் கட்டமைப்பின் கீழ் சான்றிதழ் பெற்றால் இதற்குத் தகுதி பெறுவர்.

இதன்மூலம், ஊழியர்களைப் பாதுகாப்பில் பயிற்சி பெற வைக்கவும் அத்தகைய பயிற்சியும் அனுபவமும் மிக்கவர் களை நீண்ட காலம் வேலையில் வைத்திருக்கவும் நிறுவ னங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. மேலும் அதிகளவு வெளிநாட்டு ஊழியர்களைச் சார்ந்திருக்கும் துறைகளில் ஒன்றான கட்டுமானத்துறைக்கு பெரும் சிரமமாக இருக் கும் தீர்வைக் கட்டணத்தைக் குறைத்து, அனுபவமுள்ள ஊழியர்களை அதிக காலம் பணியில் வைத்திருக்க உதவும் இந்தத் திட்டம், நிறுவனங்களுக்கு நல்லதொரு சன்மானம். இதன்வழி ஊழியர் பாதுகாப்பில் நிறுவனங்கள் அக்கறை செலுத்தும் என நம்பலாம்.

குறைந்த சம்பள வேலைகள், அதுவும் வெளிநாட்டு ஊழியர்களை அதிகம் கொண்ட கட்டுமானம் போன்ற துறைகளில் வேலையிட மரணங்கள் அதிகமாகவே நிகழ் கின்றன. ஜனவரி மாதம் முதல் இதுவரையில் வேலையிட விபத்துகளில் 40 பேர் மரணமடைந்து விட்டனர். இதில் 17 மரணங்கள் கட்டுமானத் துறையில் நிகழ்ந்துள்ளன. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிட இரண்டு மடங்கு அதிகம். மேலும் கடந்த ஆண்டில் கட்டுமானத் துறையில்தான் அதிகமான மரணங்கள் நிகழ்ந்தன.

2005ஆம் ஆண்டு 100,000 ஊழியர்களுக்கு 4 என்ற எண்ணிக்கையில் இருந்த மரணங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 100,000க்கு 1.9 ஆகக் குறைந்துள்ளது. ஆனால், பிரிட்டனைவிட சிங்கப்பூர் பின்தங்கியே இருக் கிறது. 2014 ஏப்ரல் முதல் 2015 மார்ச் வரையில் 100,000க்கு 0.46 மரணங்களே பிரிட்டனில் நிகழ்ந்துள்ளன.

சிங்கப்பூரில் வேலையிட மரணங்களின் அளவு குறைந் துள்ளன என்றாலும், ஒவ்வொரு மரணமும் தவிர்க்கப்பட்டி ருக்கக்கூடியது என்பதை மறந்துவிடக்கூடாது. காலணி வழுக்கி விழுந்தது, பாதுகாப்புக் கம்பிகள் இல்லாமல் உயரமான இடத்தில் வேலை பார்க்கும்போது தவறி விழுந் தது என நிகழ்ந்த எல்லா மரணங்களையும் தடுத்திருக்க லாம். குறைந்த சம்பளம் பெறுபவர்கள், வெளிநாட்டினர் என எவ்வித பாகுபாடுமின்றி, காயங்கள், விபத்துகள் இல்லாமல் பாதுகாப்பாக வீடு திரும்ப அனைத்து ஊழி யர்களுக்கும் உரிமை உண்டு.

மரணங்கள், காயங்கள் அறவே ஏற்படாத அதிபாது காப்புமிக்க வேலையிடங்களை உருவாக்குவது சிங்கப் பூரின் இலக்கு. அந்த இலக்கை அடைவதில் நிறுவனங் களும் முதலாளிகளும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். ஊழியர்களுக்குப் பாதுகாப்பான வேலைச் சூழலை அமைத் துத் தருவது, பாதுகாப்பில் முறையான பயிற்சியை அக்க றையுடன் அளிப்பது எனப் பாதுகாப்பு, சுகாதாரத்திற்கென ஒரு தொகையை நிறுவனங்கள் ஒதுக்கி வைத்துவிட வேண்டும். அத்துடன் தீர்வைக் கட்டணத்தில் சேமிக்கும் தொகையைக் கொண்டு ஊழியர்களின் சம்பளத்தையும் உயர்த்தலாம். அதன்மூலம் ஓய்வு ஒழிச்சலின்றி வருமானத் துக்காகக் கூடுதல் நேரம் பார்த்து வேலையில் கவனம் செலுத்த முடியாது விபத்தில் சிக்குவோரின் வாழ்க்கைப் பாணியை மாற்றலாம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!