பால்மாவு-தாய்ப்பால் மனப்போக்கு முக்கியம்

உலகில் எத்தனையோ உயிரினங்கள் வாழ்ந்து வந்தாலும் பாலூட்டிகளுக்கு என்று தனிச்சிறப்பு உண்டு. இந்த இனத்தைச் சேர்ந்த உயிரினங்களுக்கு=அவை விலங்கு களாக இருந்தாலும் மனிதப் பிறவியாக இருந்தாலும் தாய்ப்பால் என்பது இயற்கையிலேயே மிகவும் இன்றியமை யாத ஒரு வரப்பிரசாதமாக இருந்துவருகிறது.

பிள்ளைகள் பிற்காலத்தில் நோய்நொடியின்றி - நீரிழிவு, உடல் பருமன் இன்றி, உடலில் தேவையற்ற சதை எதுவு மின்றி, முழுமையாக வளர்ச்சி அடைந்து நீடித்த ஆயுளுடன் வாழ அடிப்படையை அமைத்துத் தருவது தாய்ப்பால்தான்.

துணைக்கோளம் ஒன்றை ஆகாயத்தில் அதற்கான பாதையில் கொண்டுவிட ஓர் ஏவுகணை அவசியம். அதுபோல் ஒரு பிள்ளையின் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை உருவாக்கி அந்தப் பிள்ளையின் உணவு மண் டலத்தைப் பலப்படுத்தி ஒரு கட்டம் வரை பிள்ளையை வளர்த்துவிட தாய்ப்பால் அவசியம். தங்களுக்குப் பிறந்த பிள்ளைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதால் தாய்மார் களுக்கு மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் ஏற்படக் கூடிய ஆபத்துகள் குறைவு என்பதும் உண்மை. இருந்தாலும் கால மாற்றங்கள், தாய்மார்களின் மன மாற்றங்கள், சூழ்நிலை, வசதிகள் காரணமாக இப்போது பல பெண்கள் தங்கள் பிள்ளைகளுக்குத் தாய்ப்பாலைச் சரிவர கொடுப்பதில்லை.

அண்மையில் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினரான ஒரு பெண்மணி, நாடாளுமன்றக் கூட்டத்தின்போது மன்றத்தின் உள்ளேயே தன் பிள்ளைக்குத் தாய்ப்பால் கொடுத்த சம்பவம் போன்றவை இடம்பெற்றாலும்கூட முன்புபோல் இப்போது பிள்ளைகளுக்குத் தாய்மார்கள் தாய்ப்பால் கொடுப்பதில்லை என்பதுதான் கசப்பான நில வரம். பதிலாக மாட்டுப்பாலைவிட பெரும்பாலும் பால் மாவையே பிள்ளைகளுக்குத் தேர்ந்து எடுத்து அதில் பெரும் பணத்தைப் பெற்றோர்கள் செலவிடுகிறார்கள். இதன் காரணமாக பால்மாவு நிறுவனங்கள் பற்பல விளம்பர உத்திகளிலும் ஆய்வு, உருவாக்கத்திலும் பெரும் பணத்தைச் செலவிடுகின்றன. தாங்கள் சொல்வதை மக்கள் நம்பாமல் போய்விடக்கூடும் என்பதால் மருத்துவ மனைகளுடன் பலவகைத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு அவற்றின் மூலம் தங்கள் தயாரிப்புகளை மக்கள் மனதில் இடம்பெறச் செய்து நிறுவனங்கள் லாபம் பார்க்கின்றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!